\
hacking
hacking reuters

ஈரானின் சைபர் தாக்குதலா? ஐரோப்பாவை உலுக்கிய மர்ம Hacking!

ஐரோப்பிய சூப்பர் மார்க்கெட்டுகளில் சைபர் தாக்குதல்: உணவுப் பொருட்கள் சேதமடைந்து கோடி ரூபாய் இழப்பு
Published on: 
Summary

ஐரோப்பிய நாடுகளில் சூப்பர் மார்க்கெட்டுகளின் குளிர்சாதனப் பெட்டிகள் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டதால், உணவுப் பொருட்கள் சேதமடைந்தன. ஹேக்கர்கள் குளிரூட்டும் அமைப்புகளை செயலிழக்கச் செய்து, வெப்பநிலையை 50 டிகிரி செல்சியஸ் வரை உயர்த்தினர். இதனால் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. இந்த தாக்குதலின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது இன்னும் தெரியவில்லை.

செய்தியாளர் - M.மீரா

ஐரோப்பிய நாடுகளில் உள்ள சூப்பர் மார்க்கெட்டுகளின் குளிர்சாதனப் பெட்டிகள் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால் பல கடைகளில் குளிர்சாதனப் பெட்டிகள் மற்றும் ஃப்ரீசர்களின் வெப்பநிலை திடீரென அதிகரித்து, பல கோடி ரூபாய் மதிப்பிலான உணவுப் பொருட்கள் சேதமடைந்துள்ளன.

பெல்ஜியம், லக்சம்பர்க், ஸ்வீடன் உள்ளிட்ட நாடுகளில் உள்ள சூப்பர் மார்க்கெட்டுகள் இந்தத் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளன. எஸ்டோனியா நாட்டில் உள்ள சூப்பர் மார்க்கெட்டிலும் இதே தாக்குதல் நடந்துள்ளது. ஏற்கெனவே கடந்த மாதம் பிரான்ஸ் நாட்டிலும் இதேபோன்ற தாக்குதல் நடைபெற்ற நிலையில், தற்போது மீண்டும் பல ஐரோப்பிய நாடுகளில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

file photo

இந்தத் தாக்குதலால் கடையில் இருந்த ஃப்ரீசர்களின் வெப்பநிலை 50 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்ததாகவும் . தாக்குதல் நடந்த சில மணி நேரங்களுக்குப் பிறகே இது கண்டுபிடிக்கப்பட்டதால் அங்கிருந்த பொருட்கள் அனைத்தும் சேதமடைந்துள்ளது.

இந்தத் தாக்குதலில், கடைகளின் குளிர்சாதனப் பெட்டிகளைக் கட்டுப்படுத்தும் கணினி அமைப்புகளை ஹேக்கர்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். குறிப்பாக, குளிர்சாதனப் பெட்டிகளில் உள்ள குளிரூட்டும் அமைப்புகளைச் செயலிழக்கச் செய்யும் வகையில், அவற்றின் செயல்பாடுகளை மாற்றியுள்ளனர்.

தற்போது குளிர்சாதனப் பெட்டிகள், ஏசி, வெப்பநிலைக் கட்டுப்பாட்டு அமைப்புகள், கண்காணிப்பு கேமராக்கள், பாதுகாப்பு அலாரங்கள் உள்ளிட்ட பல சாதனங்கள் இணையம் மூலம் கண்காணிக்கப்பட்டு, தொலைவிலிருந்தே கட்டுப்படுத்தப்படுகின்றன. இதனால் அவற்றை ஹேக்கர்கள் குறிவைப்பது எளிதாகியுள்ளது.

hacking
hacking reuters

பின்னணியில் யார் இருக்கிறார்கள்?

இந்தத் தாக்குதல்களுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. தற்போதைய தாக்குதலுக்கும் கடந்த மாதம் பிரான்ஸில் நடந்த தாக்குதலுக்கும் தொடர்பு இருக்கிறதா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இருப்பினும், இந்தத் தாக்குதல்களின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை.

இத்தகைய உள்கட்டமைப்பு சார்ந்த சைபர் தாக்குதல்களை (Operational Technology Attacks) முன்னெடுக்கும் திறன் கொண்ட சர்வதேச சக்திகளாக ஈரான் மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகள் மட்டுமே அறியப்படுவதாகப் பாதுகாப்பு நிபுணர்கள் கருதுகின்றனர்.

ஹேக்கர்கள் பொதுவாகப் பணயத் தொகை (Ransom) கேட்டு மிரட்டுவதற்காகவே சைபர் தாக்குதல் நடத்துவர். ஆனால் இந்த சூப்பர் மார்க்கெட் தாக்குதல்களில் அதுபோன்ற எந்தப் பணக் கோரிக்கையும் விடுக்கப்படவில்லை. எனவே, ஐரோப்பிய நாடுகளின் அன்றாடப் பொதுவாழ்வையும், உணவுப் பாதுகாப்புச் சங்கிலியையும் சீர்குலைக்கும் நோக்கில் மட்டுமே இந்தத் தாக்குதல் திட்டமிடப்பட்டுள்ளதாக சென்டினல்ஒன் (SentinelOne) போன்ற சைபர் பாதுகாப்பு நிறுவனங்களின் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

hacking
இஸ்ரேலில் ஆட்சியைப் பிடிக்க குறுக்கு வழி.. எதிர்க்கட்சியுடன் கைக்கோர்க்கும் நெதன்யாகு?