அமெரிக்காவில் குற்ற செயலில் ஈடுபட்ட அணிலை காவல் துறையினர் கைது செய்த சுவாரசியமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இதுக்குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் ஃபேஸ்புக்கில் காவல்துறையினரால் வெளியிடப்பட்டுள்ளது. டிசம்பர் மாதம் தொடங்கியதுமே வெளி நாடுகளில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் களைக்கட்ட துவங்கி விடுவது வழக்கமான ஒன்று. இந்நிலையில் நியூ ஜெர்சியில் சீ கிரிட் என்ற பகுதியில் கிறிஸ்துமஸ் பண்டிகையொட்டி பெரிய அளவிலான கிறிஸ்துமஸ் மரங்கள் வைக்கப்பட்டுள்ளன. இதில் அழகுக்காக பலவண்ண நிறத்திலான விளக்குகள் தொங்க வைக்கப்பட்டுள்ளன.
இந்த விலக்குகளை அந்தப் பகுதியில் சுற்றித்திரிந்த அணில் ஒன்று சேதப்படுத்தி உள்ளது. இந்த செயலை செய்த அணிலை சீ கிரிட் காவல்துறையினர் தொடர்ந்து கண்காணித்து ஆதரத்துடன் பிடித்துள்ளனர். மேலும் இந்த அணிலை பிடித்த காவல் துறையினர், பல நாட்களாக குற்ற செயலில் ஈடுபட்ட குற்றவாளியை பிடித்து விட்டதாக நகைச்சுவையுடன் முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். அத்துடன் விசாரணைக்கு பின்பு அணிலை பெயிலில் விடுவித்ததாகவும் காவல் துறையினர் கூறியுள்ளனர். தற்போது இந்த சம்பவம் அமெரிக்க ஃபேஸ்புக் தளங்களில் வைரலாக பரவி வருகிறது.