87 திருமணங்கள் செய்து ’playboy king’ பட்டம் பெற்ற இந்தோனேஷிய நபர்: அடுத்த திருமணம் ஏற்பாடு

87 திருமணங்கள் செய்து ’playboy king’ பட்டம் பெற்ற இந்தோனேஷிய நபர்: அடுத்த திருமணம் ஏற்பாடு
87 திருமணங்கள் செய்து ’playboy king’ பட்டம் பெற்ற இந்தோனேஷிய நபர்: அடுத்த திருமணம் ஏற்பாடு

இந்தோனேஷியாவைச் சேர்ந்த 61 வயது நபர் ஒருவர் 88வது முறை திருமணம் செய்வுள்ளார். இவருக்கு ’ப்ளே பாய் கிங்’ என பட்டப்பெயர் சூட்டப்பட்டுள்ளது.

ஒரு மனைவியை வைத்தே சமாளிக்கவே முடியவில்லை என்று விவாகரத்து அதிகரித்துவரும் இந்த காலத்தில், பல திருமணம் மற்றும் நிறைய குழந்தைகள், கூட்டுக்குடும்பம் என வாழ்வோரின் செய்திகள் உலகளவில் பரவி ட்ரெண்ட் ஆகிவருகிறது. அந்த வரிசையில் 87 ஆவது திருமணம் செய்து ’ப்ளே பாய் கிங்’ என்ற பட்டத்தைப் பெற்றுள்ளார் இந்தோனேஷியா நபர்.

மேற்கு ஜாவாவிலுள்ள மஜலெங்கா பகுதியைச் சேர்ந்த விவசாயி கான்(61). இவருக்கு தற்போது 88வது முறை திருமணம் நடைபெறவிருக்கிறது. முதன்முதலில் இவருக்கு திருமணம் ஆகும்போது இவருடைய வயது 14. அப்போது அவரைவிட 2 வயது பெரிய பெண்ணை திருமணம் செய்து வைத்துள்ளனர். இரண்டு வருடம் ஒன்றாக வாழ்ந்த இவர்களுடைய திருமண வாழ்க்கை கசந்துபோகவே விவாகரத்து கேட்டுள்ளார் முதல் மனைவி. அங்கிருந்து தொடங்கியிருக்கிறது கானின் திருமண லிஸ்ட்.

தனது 88 திருமணங்கள் மற்றும் அனுபவங்கள் குறித்து கான் கூறுகையில், ‘’முதல் மனைவியிடம் எனது மோசமான அணுகுமுறையால் அவர் இரண்டே வருடத்தில் என்னிடமிருந்து விவாகரத்து கேட்டார். பெண்களுக்கு நல்லது செய்யாத விஷயங்களை நான் செய்ய விரும்பவில்லை. நான் அவர்களின் உணர்வுகளுடன் விளையாட மறுக்கிறேன். ஆனால் ஒழுக்கமற்று நடந்துகொள்வதைவிட திருமணம் செய்வது சிறந்தது. இப்போது நான் மீண்டும் திருமணம் செய்யவுள்ள பெண் எனது 86வது மனைவி. நாங்கள் வெறும் இரண்டே மாதங்கள் ஒன்றாக இருந்து நீண்ட நாட்களுக்கு முன்பே பிரிந்துவிட்டாலும், அவர் மீண்டும் என்னைத்தான் திருமணம் செய்துகொள்வேன் என தலைகீழாக நிற்கிறார்’’ என்கிறார்.

மேலும் பெண்களுக்கு தன்மீது ஈர்ப்புவர ஆன்மிகத்தின் உதவியை நாடியதாகவும் கூறுகிறார் கான். மேலும் 87 திருமணங்கள் செய்த கானுக்கு இதுவரை எத்தனை குழந்தைகள் பிறந்துள்ளனர் என்பது குறித்த விவரங்கள் சரியாக இல்லை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com