இந்தோனேஷியா : கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 44 பேர் பலி

இந்தோனேஷியா : கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 44 பேர் பலி

இந்தோனேஷியா : கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 44 பேர் பலி
Published on

இந்தோனேஷியாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 44 பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர்.

இந்தோனேஷியாவில் ஈஸ்டர் பண்டிகைக்கு சில மணிநேரங்களுக்கு முன்னர் பெய்த கனமழையால் ஏற்பட்ட  நிலச்சரிவால், நாட்டின் கிழக்கு மாகாணத்தில் புளோரஸ் தீவு கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது.

இந்தோனேஷியாவின் கிழக்கு  மாகாணத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 44 பேர் உயிரிழந்ததாக மீட்புப்பணி அதிகாரிகள் தெரிவித்தனர்.  “கிழக்கு புளோரஸ் ரீஜென்சியில் நிலச்சரிவால் ஒன்பது பேர் காயமடைந்தனர், 44 பேர் இறந்துவிட்டனர். 50க்கும் மேற்பட்ட வீடுகள் சேற்றில் புதைந்துள்ளன, பலர் இன்னும் சேற்றில் சிக்கியுள்ளனர்" என்று தேசிய பேரிடர் மீட்பு ஆணைய செய்தித் தொடர்பாளர் ராதித்யா ஜாதி தெரிவித்தார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com