இந்தோனேசியா: கால்பந்து போட்டியின் போது ரசிகர்களுக்குள் மோதல் - 174 பேர் பலி!

இந்தோனேசியா: கால்பந்து போட்டியின் போது ரசிகர்களுக்குள் மோதல் - 174 பேர் பலி!
இந்தோனேசியா: கால்பந்து போட்டியின் போது ரசிகர்களுக்குள் மோதல் - 174 பேர் பலி!

இந்தோனேசியாவில் கால்பந்து போட்டியின் போது ரசிகர்களுக்குள் வெடித்த மோதலின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 174 ஆக அதிகரித்துள்ளது

இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவாவில் Arema FC மற்றும் Persebaya Surabaya ஆகிய இரு உள்ளூர் அணிகள் இடையே கால்பந்து போட்டி நடைபெற்றது. போட்டி துவங்கியது முதலே இரு அணிகளின் ரசிகர்களும் ஆர்ப்பரிப்புடன் கூச்சலிட்டாவாறு போட்டியை கண்டு களித்துள்ளனர். பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் Arema FC அணியை Persebaya Surabaya அணி வீழ்த்தியது.

போட்டி முடிவில் இரு தரப்பு ரசிகர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் அது கைகலப்பாக மாறியுள்ளது. ரசிகர்கள் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக்கொண்ட நிலையில் அவர்களை கலைக்க காவல் துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இதையடுத்து பீதியில் ரசிகர்கள் தப்பி ஓட முற்பட்ட போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்தனர்.

இச்சம்பவத்தில் தற்போது 174 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 100 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெறுவதாகவும் இவர்களில் 11 பேர் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அந்நாட்டில் அடுத்து நடைபெற இருந்த எஞ்சிய கால்பந்து போட்டிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.உலகளவில் விளையாட்டு போட்டிகளின் போது மிக அதிகம் பேர் இறந்த நிகழ்வாக இது கருதப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com