இந்தோனேசியாவின் பாலி தீவில் உள்ள எரிமலை எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம் என்பதால் அந்த பகுதியை சுற்றியுள்ள 10,000 பேர் இதுவரை வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இந்தோனேசியாவில் 130க்கும் அதிகமான எரிமலைகள் உள்ளன. அதில் ஒன்று பாலி தீவில் உள்ள மவுண்ட் ஆகுங் மலையில் சுமார் ஒன்பது கிலோமீட்டர் (5.6 மைல்கள்) தொலைவிற்கு அமைந்துள்ளது. இந்த எரிமலையானது 1963 ஆம் ஆண்டு வெடித்தது. இதில் 1,000 க்கும் மேற்பட்டோர் இறந்தனர்.
இந்நிலையில் இந்த எரிமலையானது 50 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது வெடிக்கவுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சிரித்துள்ளனர். இதையடுத்து அந்த பகுதியை சுற்றியுள்ள 10,000-க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பு கருதி வெளியேற்றபட்டுள்ளனர். மவுண்ட் ஆகுங் மலை பகுதியில் இன்று காலை நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. எனவே இன்னும் சில தினங்களில் எரிமலை வெடித்துச் சிதறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் பாலியில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் தற்போது தங்கவைக்கப்பட்டுள்ளனர்.