அமேசான் காட்டில் 100 சுற்றுலாப் பயணிகளை கடத்திய பழங்குடியினர்.... காரணம் என்ன ?

அமேசான் காட்டில் 100 சுற்றுலாப் பயணிகளை கடத்திய பழங்குடியினர்.... காரணம் என்ன ?
அமேசான் காட்டில் 100 சுற்றுலாப் பயணிகளை கடத்திய பழங்குடியினர்.... காரணம் என்ன ?

உலகின் மிகப்பெரிய மழைக் காடுகளில் ஒன்றான அமேசான் பரந்து விரிந்துள்ள நாடுகளில் ஒன்றாகப் பெரு-வும் இருக்கிறது. அந்தப் பகுதிகளைச் சுற்றிப் பார்க்க வந்த 100 சுற்றுலாப்பயணிகளைப் பழங்குடியின மக்கள் கடத்திய சம்பவம் பெரும் அந்நாட்டில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.  கடத்தப்பட்ட 100 பேரில் 27 பேர் அமெரிக்கா, ஸ்பெயின் , ஃபிரான்ஸ், பிரிட்டன் மற்றும் ஸ்விட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர்கள். மீதம் பேர் பெரு நாட்டைச் சேர்ந்தவர்கள் இந்த குழுவில் குழந்தைகளும் இருந்திருந்திருக்கின்றனர்.

கடந்த வியாழக்கிழமையன்று குனினிகோ நதியில் ஒரு படகில் இந்தக் குழுவினர் பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்போது வழியில் குறுக்கிட்ட பழங்குடியின குழு ஒன்று அவர்களைக் கடத்திச் சென்றது. பெருவில் உள்ள மனித உரிமைகள் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் பழங்குடியின குழுவினருடன் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பின்னர் அனைத்து சுற்றுலாப்பயணிகளும் அனைவரும் நேற்று பாதுகாப்பாக விடுவிக்கப்பட்டிருக்கின்றனர். கடந்த செப்டம்பர் 16-ம் தேதியன்று 2500 டன் கச்சா எண்ணெய் குனினிகோ ஆற்றில் கசிந்திருக்கிறது. பழங்குடியின மக்கள் தொடர்ந்து கோரிக்கை எழுப்பிய பின்னரும் அரசு அதைக் கண்டுகொள்ளாமல் இருந்திருக்கிறது. ஆகவே அரசுக்கு அழுத்தம் கொடுக்கவே இந்த கடத்தலில் ஈடுபட்டதாகப் பழங்குடியினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

" எங்கள் பகுதியில் சுமார் 25,000 பேர் வசித்து வருகிறோம். நாங்கள் வாழும் பகுதியில் ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் பாதிப்பை மதிப்பீடு செய்ய அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகவே அரசின் கவனத்தை ஈர்க்கவும் இந்த பிரச்னையின் தீவிரத்தை எடுத்துக்காட்டவுமே சுற்றுலாப்பயணிகளைக் கடத்தினோம் " என பழங்குடியின மக்களின் தலைவர் வாட்சன் ட்ருஜிலோ தெரிவித்திருக்கிறார். கடத்தப்பட்டவர்களில் ஒருவரான பெரு நாட்டைச் சேர்ந்த சைக்கிளிஸ்ட் ஏஞ்சலா ராமிரெஸ் என்பவர் தாங்கள் விடுவிக்கப்பட்டோம் என்பதைத் தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த தகவல் மூலமாக உறுதிப்படுத்தியிருக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com