குவைத்தில் தொடர் போராட்டம்: தமிழர்கள் உட்பட 4, 700 இந்தியர்கள் தவிப்பு

குவைத்தில் தொடர் போராட்டம்: தமிழர்கள் உட்பட 4, 700 இந்தியர்கள் தவிப்பு

குவைத்தில் தொடர் போராட்டம்: தமிழர்கள் உட்பட 4, 700 இந்தியர்கள் தவிப்பு
Published on

குவைத்தின் கராஃபி நேஷனல் என்ற நிறுவனத்தில் ஊதியம் வழங்கப்படாத இந்தியத் தொழிலாளர்கள் தொடர்ந்து 10ஆவது நாளாக‌ அலுவலகத்திலேயே தங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஊதியமும், நாடு திரும்புவதற்கான விசாவும் வழங்காமல் நிறுவனம் இழுத்தடிப்பதாக தொழிலாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

சுமார் 1200 தமிழர்கள் உள்பட மொத்தம் 4 ஆயிரத்து 700 பேருக்கு பல மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என புகார் எழுந்துள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு முதல் ஊதியம் தொடர்பான பிரச்னை நீடித்து வருவதாக ஊழியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். விசா காலம் முடிவடைந்திருப்பதால், பொது இடங்களுக்கு வர முடியாமல் வீடுகள், முகாம்கள், அலுவலகங்கள் போன்றவற்றிலேயே பலர் முடங்கியிருக்கிறார்கள். 

அலுவலகத்தில் தங்கியிருக்கும் பலருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டிருக்கிறது. உணவும் கிடைக்கவில்லை. நிலுவையில் உள்ள ஊதியத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என ஊழியர்கள் வலியுறுத்துகின்றனர். இவ்விவகாரத்தில் இந்தியத் தூதரகமும் மாநில அரசுகளும்‌ விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com