ஏர்போர்ட்டில் பேச்சு-மூச்சு இல்லாமல் மூர்ச்சையாகி கிடந்த இந்தியப்பெண்-வாஷிங்டனில் பரபரப்பு

ஏர்போர்ட்டில் பேச்சு-மூச்சு இல்லாமல் மூர்ச்சையாகி கிடந்த இந்தியப்பெண்-வாஷிங்டனில் பரபரப்பு
ஏர்போர்ட்டில் பேச்சு-மூச்சு இல்லாமல் மூர்ச்சையாகி கிடந்த இந்தியப்பெண்-வாஷிங்டனில் பரபரப்பு

அமெரிக்காவின் வாஷிங்டன் விமான நிலையத்தில் பேச்சு - மூச்சு இல்லாமல் மூர்ச்சையாக கிடந்த இந்தியப் பெண்ணை அங்கிருந்த விமான ஊழியர்கள் சிபிஆர் சிகிச்சை கொடுத்து காப்பாற்றிய சம்பவம் அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.

இந்தியாவைச் சேர்ந்த 54 வயது பெண்மணி ஒருவர், கத்தாரில் இருந்து அமெரிக்க தலைநகர் வாஷிங்டனுக்கு நேற்று மாலை சென்றுள்ளார். மாற்றுத்திறனாளி என்பதால் அவர் சக்கர நாற்காலியில் தனது உடைமைகளை எடுத்துக் கொள்வதற்காக மற்ற பயணிகளுடன் காத்திருந்தார். இந்நிலையில், அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு பேச்சு, மூச்சு இல்லாமல் மூர்ச்சையாகி விட்டார். நீண்டநேரமாகியும் அவர் ஒரே இடத்தில் இருந்ததால் சந்தேகமடைந்த விமான நிலைய ஊழியர்கள், அங்கு சென்று பார்த்த போது அவரது இதயத்துடிப்பு நின்று போயிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, விமான நிலையத்தில் இருந்த மருத்துவ ஊழியர்கள் உடனடியாக அங்கு வந்து அவரது நெஞ்சுப் பகுதியில் கையை வைத்து அழுத்தி சிபிஆர் சிகிச்சை கொடுத்தனர். எனினும், அவருக்கு இதயத்துடிப்பு வரவில்லை.

இதன் தொடர்ச்சியாக, அவரை விமான நிலையத்தில் இருந்த முதலுதவி அறைக்கு தூக்கிச் சென்ற ஊழியர்கள், அங்கு மருத்துவ உபகரணங்களுடன் அவருக்கு சிபிஆர் சிகிச்சை கொடுக்கப்பட்டது. ஊழியர்களின் 15 நிமிட தொடர் முயற்சியின் காரணமாக நின்றுபோன அவரது இதயம் மீண்டும் துடிக்கத் தொடங்கியது.

அதன் பின்னர், விமான நிலையத்துக்கு அருகே உள்ள மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்த செய்திகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. உரிய நேரத்தில் சமயோகிஜதமாகவும், பொறுப்புடனும் செயல்பட்ட விமான நிலைய ஊழியர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com