மீட்கப்பட்ட சடலம் காணாமல் போன இந்திய குழந்தை: அமெரிக்க காவல்துறை உறுதி

மீட்கப்பட்ட சடலம் காணாமல் போன இந்திய குழந்தை: அமெரிக்க காவல்துறை உறுதி

மீட்கப்பட்ட சடலம் காணாமல் போன இந்திய குழந்தை: அமெரிக்க காவல்துறை உறுதி
Published on

அமெரிக்காவில் கண்டெடுக்கப்பட்ட குழந்தையின் சடலம், காணாமல் போன இந்திய குழந்தையின் சடலம் தான் என்பதை காவல்துறையினர் உறுதி செய்துள்ளனர்.

டெக்சாஸில் இரு வாரங்களுக்கு முன் பால் குடிக்க மறுத்ததால் வீட்டுக்கு வெளியே விட்டுச் செல்லப்பட்ட மூன்று வயது இந்திய குழந்தை ஷெரீன் காணாமல் போனது. வளர்ப்புத் தந்தையை கைது செய்த காவல்துறையினர், குழந்தையை தீவிரமாக தேடி வந்தனர். வீடு அருகே இருந்த சுரங்கப்பாதையில் ஒரு குழந்தையின் சடலம் மீட்கப்பட்டது. தற்போது சடலமாக கண்டெடுக்கப்பட்டது ஷெரீன் தான் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. எனினும் குழந்தை உயிரிழந்தது எப்படி என தெரியவில்லை. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com