\
‘விட்டுவர மனமில்லை’- உக்ரைனிலிருந்து செல்லப்பிராணிகளை கொண்டு வந்த மாணவர்கள்

‘விட்டுவர மனமில்லை’- உக்ரைனிலிருந்து செல்லப்பிராணிகளை கொண்டு வந்த மாணவர்கள்

‘விட்டுவர மனமில்லை’- உக்ரைனிலிருந்து செல்லப்பிராணிகளை கொண்டு வந்த மாணவர்கள்
Published on: 

இந்திய விமானப்படையின் விமானம் மூலம் உக்ரைனிலிருந்து நாடு திரும்பிய மாணவர்கள், செல்லப் பிராணிகளையும் அழைத்து வந்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போலந்திலிருந்து 208 மாணவர்கள், விமானத்தில் டெல்லி வந்திருந்தனர். அப்போது, சாஹித் என்ற மாணவர், தன்னுடன் நாயையும் அழைத்து வந்தார். தாக்குதலில் இருந்து தனது நண்பரின் நாயை பாதுகாப்பதற்காக தன்னுடன் அழைத்து வந்ததாக சாஹித் தெரிவித்துள்ளார். இதே போல, கெளதம் என்ற மாணவர், தான் செல்லமாக வளர்த்து வந்த பூனையை அழைத்து வந்துள்ளார். கடந்த நான்கு மாதங்களாக இந்த பூனையை வளர்த்து வருவதாகவும், தாக்குதல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, தன்னுடன் பதுங்கு அறையில் இந்த பூனை இருந்ததாகவும் கெளதம் தெரிவித்துள்ளார். அதனை பிரிய மனமில்லாமல், பூனையையும் எடுத்துக் கொண்டு போலந்து வரை பயணித்து, தற்போது விமானத்தில் டெல்லி வந்துள்ளதாக அவர் கூறினார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com