\
அமெரிக்காவில் இந்திய பொறியாளர் சுட்டுக்கொலை

அமெரிக்காவில் இந்திய பொறியாளர் சுட்டுக்கொலை

அமெரிக்காவில் இந்திய பொறியாளர் சுட்டுக்கொலை
Published on

அமெரிக்காவில் கான்சாஸ் நகரில் இந்திய பொறியாளர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

கான்சாஸ் நகரில் உள்ள மதுபான பாரில் இருந்த ஸ்ரீநிவாஸ் குச்சபோட்லா மற்றும் அலோக் மதாசனி ஆகியோரை ஆதம் புரன்டன் என்பவர் சுட்டார். நாட்டை விட்டு வெளியேறு என கூச்சலிட்டவாறே சுட்டிருக்கிறார்.

இச்சம்பவத்தில் ஸ்ரீநிவாஸ் சிறிது நேரத்தில் இறந்து விட்ட நிலையில் காயமடைந்த அலோக் மதாசனி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இத் துப்பாக்கி சூட்டில் காயமடைந்த அமெரிக்கரான இயான் கிரிலோட் - டும் சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையில் துப்பாக்கிச் சூட்டுக்கு காரணமான ஆதம் புரன்டன் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவில் இந்திய பொறியாளர் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார். உயிரிழந்த பொறியாளரின் குடும்பத்திற்கும் அவர் இரங்கலை தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com