\
ஸ்மித் மச்சார்
ஸ்மித் மச்சார்reuters

உயிரைப் பணயம் வைத்து விமான விபத்தைத் தடுத்த இந்திய பைலட்.. உயரிய விருது வழங்கிய UAE!

விமானத்தில் ஆபத்தான சூழலில் 180 பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய இந்திய பைலட்டுக்கு அமீரகத்தின் உயரிய விருது!
Published on: 

செய்தியாளர் - M.மீரா

விமானத்தில் ஏற்பட்ட ஆபத்தான சூழலிலும் துணிச்சலுடன் செயல்பட்டு, பயணிகளின் உயிரைக் காப்பாற்ற உதவிய இந்திய விமானி கேப்டன் ஸ்மித் மச்சார் மற்றும் ஃபிளைதுபாய் விமானக் குழுவினருக்கு ஐக்கிய அரபு அமீரகம் உயரிய விருது வழங்கியுள்ளது.

பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்து, பெரும் விபத்தைத் தவிர்க்க உதவியதற்காக இந்தக் கௌரவம் வழங்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான், விமானக் குழுவினருக்கு ‘முதல்தர சயீத் II விருது’ வழங்கி பாராட்டினார். துபாய் இளவரசரும் பாதுகாப்பு அமைச்சருமான ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் விருதுகளை நேரில் வழங்கினார்.

கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி துபாயிலிருந்து டெல் அவிவ் நோக்கி ஃபிளைதுபாய் விமானம் சென்று கொண்டிருந்தது. இதில் ​​ஓமன் நாட்டுத் துணை விமானி ஹமாம் அல்-ஹம்மாமி, இந்திய கேப்டன் ஸ்மித் மச்சாரைத் தாக்கி, விமானத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற முயன்றார். இதனால், அந்த விமானம் 30 வினாடிகளுக்கும் சற்று அதிகமான நேரத்தில் 16,000 அடி கீழே சரிந்தது. காயத்துடன் போராடிய விமானி ஸ்மித் மச்சார், சாமர்த்தியமாக விமானம் கடத்தப்பட்டதற்கான சர்வதேச 'Squawk 7500' அவசர எச்சரிக்கை குறியீட்டை அனுப்பினார். மேலும், காக்பிட் (Cockpit) கதவைத் திறந்து பயணிகள் மற்றும் ஓய்வில் இருந்த விமானிகள் உதவியுடன் அந்த தாக்குதல் சம்பவத்தை முறியடித்தார்.

அவரது வீரச் செயலை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியிருந்தார். அமெரிக்க அதிபரும் இஸ்ரேல் பிரதமரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தனர். மேலும், இஸ்ரேல் அரசு அவருக்கு உயரிய குடிமக்கள் வீரதீர விருதை அறிவித்துள்ளது.

ஸ்மித் மச்சார்
நடுவானில் கத்திக்குத்து.. காயத்துடன் 180 பயணிகளைக் காப்பாற்றிய இந்திய விமானி.. யார் இவர்?
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com