\
சிங்கப்பூரில் பாலியல் வன்கொடுமை முயற்சி: இந்திய வம்சாவளியை சேர்ந்தவருக்கு சிறைத்தண்டனை

சிங்கப்பூரில் பாலியல் வன்கொடுமை முயற்சி: இந்திய வம்சாவளியை சேர்ந்தவருக்கு சிறைத்தண்டனை

சிங்கப்பூரில் பாலியல் வன்கொடுமை முயற்சி: இந்திய வம்சாவளியை சேர்ந்தவருக்கு சிறைத்தண்டனை
Published on

சிங்கப்பூரில் சரக்கு டெலிவரி டிரைவராக வேலை செய்து வருகிறார் இந்திய வம்சாவளியை சேர்ந்த கண்ணன் சுகுமாரன். அறுபது வயதான அவர் கடந்த மே மாதம் பணியில் இருந்த அவர் வேனில் இருந்தபடி செல்போனில் ஆபாச படத்தை பார்த்துள்ளார். அப்போது அந்த வழியாக 36 வயது மதிப்புத்தக்க பெண் ஒருவர் ஓட்டப்பயிற்சி மேற்கொண்டுள்ளார். 

அதனை கவனித்த கண்ணன் சுகுமாரன் அந்த பெண்ணை அந்த பகுதியிலிருந்த புதருக்குள் வலுக்கட்டாயமாக இழுத்து சென்று பலாத்காரம் செய்ய முற்பட்டுள்ளார். 

கண்ணன் சுகுமாரனின் பிடியிலிருந்து தப்பிக்க போராடி பார்த்த அந்த பெண் இறுதியில் உதவி கேட்டு கூச்சலிட்டுள்ளார். அவரது கூச்சல் சப்தத்தை கேட்டு அந்த பகுதியில் இருந்தவர்கள் உதவ முன்வந்துள்ளனர். ஆனால் அதற்குள் அங்கிருந்து வேனில் தப்பித்துள்ளார் அவர். 

பின்னர் இது குறித்து போலீசில் வழக்கு தொடுக்கப்பட்ட நிலையில் கண்ணன் சுகுமாரனின் வேன் எண்ணை கொண்டு அவரை போலீசார் கைது செய்துள்ளனர். 

பலகட்ட விசாரணைக்கு பிறகு கண்ணன் சுகுமாரன் குற்றம் செய்தது நிரூபிக்கப்பட்ட காரணத்தினால் அவருக்கு நான்கு ஆண்டுகள் மூன்று மாத காலம் சிறை தண்டனையை இன்று விதித்தது சிங்கப்பூர் நீதிமன்றம்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com