திரில்லிங் திருட்டு: டிரம்பின் முன்னாள் இந்திய வம்சாவளி பார்ட்னர் கைது!

திரில்லிங் திருட்டு: டிரம்பின் முன்னாள் இந்திய வம்சாவளி பார்ட்னர் கைது!

திரில்லிங் திருட்டு: டிரம்பின் முன்னாள் இந்திய வம்சாவளி பார்ட்னர் கைது!
Published on

விமான நிலையத்தில் லக்கேஜை திருடியதாக, அமெரிக்க அதிபர் டிரம்பின் முன்னாள் தொழில் பார்ட்னரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான, தினேஷ் சாவ்லா கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க தொழிலதிபர் தினேஷ் சாவ்லா. இவர் தனது சகோதரருடன் அமெரிக்காவின் பல் வேறு பகுதிகளில் ’சாவ்லா ஹோட்டல்ஸ்’ நிறுவனத்தை நடத்தி வருகிறார். அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி யாகவும் இருக்கிறார். அமெரிக்க அதிபர் டிரம்ப் குடும்பத்துக்குச் சொந்தமான ஹோட்டல்களில், பார்ட்னராகவும் இருந்தார். இவர் அமெரிக்காவின் டென்னஸியில் உள்ள மெம்பிஸ் சர்வதேச விமான நிலையத்தில், 2 லக்கேஜ்களை திருடியதாக புகார் கூறப்பட்டது. 

இதையடுத்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். திருடியதை ஒப்புக்கொண்ட அவர், அதற்குள் இருந்த 4 ஆயிரம் அமெரிக்க டாலர் மதிப்பிலான பொருட்களையும் தான் எடுத்துக்கொண்டதாகத் தெரிவித்தார். இதை நீண்ட நாட்களாக செய்துவருவதாகவும் தெரிவித்துள்ளார்.

‘’திருடுவது குற்றம் என்பது தெரியும். இருந்தாலும் த்ரில்லிங்கிற்காகவும் உற்சாகத்துக்காகவும் இதை செய்துவந்தேன்’’ என்று தெரிவித்துள்ள சாவ்லாவை போலீசார் கைது செய்துள்ளனர்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com