\
இந்திய வம்சாவளி பெண் கனடா நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சராக நியமனம்

இந்திய வம்சாவளி பெண் கனடா நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சராக நியமனம்

இந்திய வம்சாவளி பெண் கனடா நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சராக நியமனம்
Published on

கனடா நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சராக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அனிதா ஆனந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.

நீண்டகாலமாக பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த ஹர்ஜித் சஜ்ஜனுக்கு பதிலாக, அனிதா ஆனந்த் நியமிக்கப்பட்டுள்ளார். ஹர்ஜித் சஜ்ஜனுக்கு வேறு துறை ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாதுகாப்புத்துறையில் எழுந்த பாலியல் குற்றச்சாட்டுகளை ஹர்ஜித் சஜ்ஜன் சரிவர கையாளவில்லை எனப் புகார் எழுந்த நிலையில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அனிதா மிகச்சிறந்த நிர்வாகி என்பதை, அடுத்த சில மாதங்களில் மக்கள் புரிந்துகொள்வார்கள் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ புகழாரம் சூட்டியுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com