”நீங்கள் முஸ்லிமா?” - கேள்வி கேட்டு இந்தியரை 15 முறை கத்தியால் குத்திய நபர்.. US-இல் அதிர்ச்சி!
அமெரிக்காவில் இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்புக் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. சமீபத்திய ஆண்டுகளில் நாடு முழுவதும் முஸ்லிம்களை இலக்காகக் கொண்ட பல கொடூரமான தாக்குதல்கள் நடந்துள்ளன. மிக சமீபத்தில், 2026-ஆம் ஆண்டில் சான் டியாகோவில் உள்ள ஒரு மசூதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஐந்து பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில், யூட்டாவில் உள்ள ஒரு வணிக வளாகத்தினுள், தனது மதம் குறித்து விசாரிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்திய முஸ்லிம் நபர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டார்.
மேற்கு வேலி சிட்டியில் உள்ள வேலி ஃபேர் மாலில், கடந்த 13ஆம் தேதி இந்தத் தாக்குதல் நடைபெற்றது. நண்பர்களால் சோஹைல் என அடையாளம் காணப்பட்டவரிடம், தாக்குதல் நடத்தியவர் முதலில் சோஹைலிடம் அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்று கேட்டபின், அவரது மதம் குறித்தும் விசாரித்துள்ளார். இதைத் தொடர்ந்து, சந்தேக நபரால் 15 முறை சோஹைல் கத்தியால் குத்தப்பட்டார். இதையடுத்து அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார். அதேநேரத்தில் கத்தியால் குத்திய பீட்டர் மைக்கேல் லார்சன் என்பவரை, கொலை முயற்சி உள்ளிட்ட பேரில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

