ஊதியம் கிடைக்காத இந்தியர்கள் குவைத்தில் 14வது நாளாக போராட்டம்
ஊதியம் கிடைக்காத இந்தியர்கள் குவைத்தில் 14வது நாளாக அலுவலகத்திலேயே தங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
குவைத்தின் கராஃபி நேஷனல் நிறுவனத்தில் ஊதியம் வழங்கப்படாத இந்தியத் தொழிலாளர்கள் தொடர்ந்து 14ஆவது நாளாக அலுவலகத்திலேயே தங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 1200 தமிழர்கள் உள்பட மொத்தம் 7000 பேருக்கு பல மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. விசா காலம் முடிவடைந்து விட்டதால், பொது இடங்களுக்கு வர முடியாமல் பலர் முடங்கியிருக்கிறார்கள். பலர் காவல்துறையினரிடம் சிக்கி, சிறையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
கராபி நேஷனல் நிறுவனத்தால் பாதிக்கப்பட்டோரின் பட்டியல் இந்தியத் தூதரகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே இந்த நிறுவனம் பணிசெய்யத் தகுதியற்றது என்ற கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கிறது. இந்தப் பிரச்னையைத் தீர்ப்பதற்காக வரும் 10-ஆம் தேதி இந்திய வெளியுறவு இணையமைச்சர் வி.கே.சிங் குவைத் செல்ல இருக்கிறார்.

