”பாகிஸ்தானை விட இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை சிறந்தது” - இம்ரான் கான் புகழாரம்

”பாகிஸ்தானை விட இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை சிறந்தது” - இம்ரான் கான் புகழாரம்

”பாகிஸ்தானை விட இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை சிறந்தது” - இம்ரான் கான் புகழாரம்
Published on

அமெரிக்கா அங்கம் வகிக்கும் QUAD கூட்டணியில் இந்தியா உறுப்பினராக இருந்தாலும், பொருளாதார தடைகளை எதிர்கொள்ளும் ரஷ்யாவிடம் இருந்து தொடர்ந்து எண்ணெய் இறக்குமதி செய்து வருவதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

தமக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொண்டுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தனது அரசாங்கத்தின் சாதனைகளை பட்டியலிட்டு உரையாற்றினார். அந்த உரையின் போது திடீரென இந்தியா மற்றும் அதன் வெளியுறவுக் கொள்கையைப் பாராட்டினார்.

அந்நாட்டின் மலாக்கண்டில் ஒரு பேரணியில் உரையாற்றிய இம்ரான் கான், "மெயின் ஆஜ் ஹிந்துஸ்தான் கோ தாத் தேதே ஹுன்” என்று கூறினார். இதற்கு நான் இன்று இந்தியாவுக்கு வணக்கம் செலுத்துகிறேன் என்று பொருள். மேலும் அவர், “இந்தியா எப்போதும் ஒரு சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையைப் பராமரித்து வருகிறது. ஆனால் இன்னும் அது தன்னை நடுநிலை என்று அழைக்கிறது. அமெரிக்கா முக்கிய அங்கம் வகிக்கும் QUAD கூட்டணியில் அங்கம் வகிக்கிறது. ஆனால் அதே அமெரிக்காவால் பொருளாதார தடைகளை எதிர்கொண்டுள்ள ரஷ்யாவிடம் இருந்து தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வருகிறது. ஏனென்றால், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை அதன் மக்களுக்கானது,” என்று கூறினார்.

குவாட் கூட்டணியின் சக உறுப்பினர்களைப் போலல்லாமல் ஐநாவின் வாக்கெடுப்பில் இந்தியா ரஷ்யாவை எதிர்த்து வாக்களிக்கவில்லை. மற்ற உறுப்பினர்களான ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா ஆகிய மூன்றும் ரஷ்யாவை எதிர்த்து வாக்களித்தன. உக்ரைனில் வன்முறையை நிறுத்துவதற்கு மட்டுமே இந்தியா அழைப்பு விடுத்தது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக ஜனவரியில், தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் இந்தியா அதன் வளர்ச்சிக்காக இம்ரான் கான் பாராட்டினார், மேலும் முதலீடுகளை ஈர்க்கும் இந்தியாவின் கொள்கைகளைப் பாராட்டினார். தற்போது இந்தியாவை அதன் வெளியுறவுக் கொள்கைகளுக்காக இம்ரான் பாராட்டியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com