கண்ணீருடன் உதவி கேட்ட பெங்களூர் பெண்: ஓடி வந்து கணவரை கைது செய்த சார்ஜா போலீஸ்!

கண்ணீருடன் உதவி கேட்ட பெங்களூர் பெண்: ஓடி வந்து கணவரை கைது செய்த சார்ஜா போலீஸ்!

கண்ணீருடன் உதவி கேட்ட பெங்களூர் பெண்: ஓடி வந்து கணவரை கைது செய்த சார்ஜா போலீஸ்!
Published on

பெங்களூர் பெண்ணை அடித்துத் துன்றுபுறுத்தியதாக, அவர் கணவரை சார்ஜா போலீசார் நேற்று கைது செய்துள்ளனர்.

பெங்களூரைச் சேர்ந்தவர் ஜாஸ்மின் சுல்தான் (33). இவர் கணவர் முகமது கைஸார். ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள சார்ஜாவில் வசித்து வந்த இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள். இந்நிலையில் ஜாஸ்மின், நேற்று முன் தினம் இரவு, ஒரு கண்ணில் ரத்தம் வடிந்த நிலையில், சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டார். 

அதில், கண்ணீர் விட்டு கதறியபடியே, ’’என்னை என் கணவர் தொடர்ந்து துன்புறுத்தி வருகிறார். இப்போதும் கடுமையாகத் தாக்கியுள்ளார். நான் சார்ஜாவில் வசிக்கிறேன். எனது முகவரி இது. எனக்கு உதவுங்கள்’’ என்று கூறியிருந்தார். இந்த வீடியோ அங்கு வைரலானதை அடுத்து, போலீசார் அவர் வீட்டுக்குச் சென்றனர். 

விசாரித்தபோது, தனது பாஸ்போர்ட், நகைகள், பணம் உள்ளிட்டவற்றை அவர் கணவர் பிடுங்கி வைத்துக்கொண்டு தினமும் அடித்து துன்புறுத்துவதாகக் கூறினார், ஜாஸ்மின். இதையடுத்து அவர் கணவர் முகமது கைஸாரை போலீசார் கைது செய்தனர்.

தனக்கு சார்ஜாவில் உறவினர்கள் இல்லாததால் தன்னை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கும்படி, ஜாஸ்மின் கேட்டுக் கொண்டதை அடுத்து அதற்கான நடவடிக்கைகளை சம்மந்தப்பட்ட துறையினர் எடுத்து வருவதாக போலீசார் தெரிவித்தனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com