“மாணவர்கள், வேலையில்லாதோர் உடனடியாக உக்ரைனில் இருந்து வெளியேறுங்கள்” - இந்திய தூதரகம்
உக்ரைனில் பதற்றம் நிலவிவருதால், அங்கிருந்து வெளியேற இந்தியர்களுக்கு மீண்டும் இந்திய தூதரகம் அறிவுரை தெரிவித்துள்ளது. அத்தியாவசிய பணியில் இல்லாதோரும், மாணவர்களும் தற்காலிகமாக உக்ரைனில் இருந்து வெளியேற இந்திய தூதரகம் அறிவுரை தெரிவித்துள்ளது.
உக்ரைன் விவகாரத்தில் ராஜாங்க ரீதியான தீர்வு காணப்படவேண்டும் என இந்தியா வலியுறுத்தி வருகிறது. ஆனால் போர் மூளும் சூழலில் இந்தியா யார் பக்கம் நிற்கும் என்பதில் எந்த தெளிவும் இல்லை. இந்த நிலையில் சமீபத்தில் ஆஸ்திரேலியா, இந்தியா, ஜப்பான் மற்றும் அமெரிக்காவை உள்ளடக்கிய குவாட் அமைப்பின் மாநாட்டில் ரஷ்யா மற்றும் உக்ரைன் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ் கூறினார்.
<iframe src="https://www.facebook.com/plugins/video.php?height=314&href=https%3A%2F%2Fwww.facebook.com%2FPutiyaTalaimuraimagazine%2Fvideos%2F298276232292586%2F&show_text=false&width=560&t=0" width="560" height="314" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowFullScreen="true"></iframe>
இந்நிலையில், உக்ரைனில் இருந்து இயக்கப்படும் விமானங்களை பயன்படுத்திக்கொள்ளுமாறும் இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. மாணவர்கள் தங்களை அழைத்து சென்றவர்களை தொடர்புக்கொண்டு, விமான சேவை குறித்த விவரங்களை பெற்றுக்கொள்ளலாம் என இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.