குழந்தை கொல்லப்பட்ட வழக்கு: கேரள இளைஞருக்கு அமெரிக்காவில் ஆயுள்!
அமெரிக்காவில், குழந்தை கொல்லப்பட்ட வழக்கில் கேரளாவைச் சேர்ந்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
கேரளாவைச் சேர்ந்தவர் வெஸ்லி மாத்யூஸ் (39). அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ரிச்சட்சன் நகரில் மனை வி சினியுடன் வசித்து வருகிறார். இவர் பீகாரில் உள்ள அனாதை இல்லம் ஒன்றில் இருந்து 2016 ஆம் ஆண்டு ஷெரின் (வயது 3) என்ற குழந்தையை தத்து எடுத்து வளர்த்தார். 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஷெரின் இரவில் பால் குடிக்காததால் கோபமான வெஸ்லியும் சினியும் வீட்டுக்கு வெளியே நிறுத்தி, குழந்தைக்குத் தண்டனை கொடுத்தனர்.
சிறிது நேரம் கழித்து சிறுமியை தேடிய போது அவள் மாயமாகி இருந்தாள். எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து போலீசில் மாத்யூஸ் புகார் கொடுத்தார்.
இதையும் படிங்க: தோனி சாதனையை இன்று முறியடிப்பாரா ரோகித்?
சம்பவம் நடந்து 2 வாரங்கள் ஆன நிலையில், மேத்யூஸ் வீட்டில் இருந்து சிறிது தொலைவில் இருந்த சுரங்க பாதையில் சிறுமியின் சடலத்தை போலீசார் மீட்டனர். இதுதொடர்பான வழக்கு நடைபெற்று வந்தது.
குழந்தையை மாத்யூஸ் அடித்துக் கொன்றது விசாரணையில் தெரியவந்தது. நீதிமன்றத்தில் அவர் அதை ஒப்புக்கொண்டார்.
இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. குற்றத்தை ஒப்புக்கொண்டதால், அவருக்கு குறைவான தண்டனை கிடைக்கும் என்று கூறப்பட்ட நிலையில், வெஸ்லி மாத்யூஸுக்கு ஆயுள் தண்டனை அளித்து டெக்சாஸ் நீதிமன் றம் உத்தரவிட்டுள்ளது.