நாசாவின் செயல் தலைவராக இந்திய வம்சாவளி பெண் நியமனம்!

நாசாவின் செயல் தலைவராக இந்திய வம்சாவளி பெண் நியமனம்!
நாசாவின் செயல் தலைவராக இந்திய வம்சாவளி பெண் நியமனம்!

நாசாவின் செயல் தலைவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பவ்யா லால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்

பவ்யா லால், 2005-2020வரை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கொள்கையின் ஆராய்ச்சி உறுப்பினராக வெள்ளை மாளிகை அலுவலகத்தில் பணிபுரிந்துள்ளார். ஜோ பைடனின் வெற்றிக்கு பிறகு நாசா அணியில் சேர்க்கப்பட்டார் பவ்யா லால். இந்நிலையில் நேற்று அவர் நாசாவின் செயல் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து தெரிவித்துள்ள நாசா, பொறியியல் மற்றும் விண்வெளி தொழில்நுட்பத்தில் விரிவான அனுபவத்தை பவ்யா செயல்படுத்துவார் என தெரிவித்துள்ளது. மேலும் விண்வெளி தொழில்நுட்பம் தொடர்பான பவ்யாவின் பல்வேறு தொடர் ஆராய்ச்சிகளுக்கும், விண்வெளித் துறையில் அவர் செய்த பல பங்களிப்புகளுக்காகவும் அவர் செயல் தலைவருக்கு பரிந்துரைக்கப்பட்டார் என நாசா குறிப்பிட்டுள்ளது.

அணுசக்தி பொறியியலில் இளங்கலை மற்றும் மாஸ்டர் ஆஃப் சயின்ஸ் பட்டங்களையும், தொழில்நுட்பம் மற்றும் கொள்கையில் முதுகலை பட்டத்தையும் பெற்றுள்ளார் பவ்யா. மேலும் ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் பொது கொள்கை மற்றும் பொது நிர்வாகத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com