சர்வதேச ஊடகங்களுக்கு சிறப்பாக பேட்டியளித்த ஐநா இந்திய தூதர்.. குவியும் பாராட்டு..!

சர்வதேச ஊடகங்களுக்கு சிறப்பாக பேட்டியளித்த ஐநா இந்திய தூதர்.. குவியும் பாராட்டு..!

சர்வதேச ஊடகங்களுக்கு சிறப்பாக பேட்டியளித்த ஐநா இந்திய தூதர்.. குவியும் பாராட்டு..!
Published on

அமெரிக்காவில் சர்வதேச ஊடகங்களுக்கு முதல்முறையாகவும் மிகச் சிறப்பாகவும் பேட்டி அளித்த ஐநாவின் இந்தியப் பிரதிநிதி சையத் அக்பர்தீனுக்கு ட்விட்டரில் பாராட்டுகள் குவிந்தன.

பாகிஸ்தானுடன் எப்போது பேச்சு நடத்தப் போகிறீர்கள் என்று கேட்ட 3 பாகிஸ்தான் பத்திரிகையாளர்களை நோக்கிச் சென்று கைகொடுத்தார் அக்பர்தீன். சிறிது நேரத்திலேயே 5 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் இதற்கான பதிவில் பாராட்டியிருந்தனர். அதேபோல பரத்வாஜ் என்பவர் ட்விட்டரில், அக்பர்தீன் என்ன ஒரு மனிதர்? இந்தியாவின் நிஜ வண்ணங்களைப் பிரதிபலித்தார், நீங்கள் இந்தியர்களுக்கு ரோல் மாடல் என்று பாராட்டியுள்ளார்.

அபூர்வ குப்தா என்பவர், ஹாட்ஸ் ஆப் என்று என்று புகழ்ந்துள்ளார். சையத் அக்பர்தீனின் பேச்சுக்காக, பேட்டிக்காக அவர் முன் தலைவணங்குவதாக ஞானேந்திரா என்பவர் குறிப்பிட்டுள்ளார். என்ன ஒரு தூதரக நிபுணர் அக்பர்தீன், இந்தியாவின் கருத்தை ஆணித்தரமாக, நேர்மையாக எடுத்து வைத்துள்ளார் என்று அபர்ணா என்பவர் பதிவிட்டுள்ளார். எப்போதும் இந்தியா பக்கம் நிற்கும் ரஷ்யாவுக்கு நன்றி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக பேட்டியளித்த சையத் அப்கர்தீன், “பேச்சுவார்த்தை என்ற இலக்கை அடைய பயங்கரவாதத்தை இந்தியாவுக்குள் தள்ளியும், முயற்சித்தும் சாதிக்க நினைப்பது நாடுகளிடையே சாதாரணமான தூதரக வழியல்ல. பயங்கரவாதம் ஒருபுறம், பேச்சுவார்த்தை மறுபுறம் என்பதை எந்த ஜனநாயக நாடும் ஏற்றுக் கொள்ள முடியாது. பாகிஸ்தான் பயங்கரவாதத்தை நிறுத்தி, பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும்” என தெரிவித்திருந்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com