3 நாடுகளின் போர்பயிற்சி சீனாவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தும் - அமெரிக்கா

3 நாடுகளின் போர்பயிற்சி சீனாவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தும் - அமெரிக்கா
3 நாடுகளின் போர்பயிற்சி சீனாவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தும் - அமெரிக்கா

வங்கக்கடலில் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் இணைந்து, போர்பயிற்சியில் ஈடுபடுவது சீனாவிற்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது. 

இந்தியாவிற்கு சீனா மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளால், அச்சுறுத்தல் இருக்கும் நிலையில், வங்காள விரிகுடா கடற்பகுதியில் இந்தியா, அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் மேற்கொள்ளும் "மலபார் - 2017" என்ற கூட்டுப் பயிற்சி நேற்று தொடங்கியது. வரும் 17ம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த பயிற்சியில், 3 நாடுகளின் போர்கப்பல்கள், விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. 

இதனிடையே, இந்தியாவிற்கு கடல்வழி அச்சுறுத்தல் தரும் சீனாவுக்கு, 3 நாடுகளின் கூட்டுப்பயிற்சி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என அமெரிக்க கடற்படை பாதுகாப்பு அதிகாரி வில்லியம் பர்ம் உள்ளிட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com