இஸ்லாமிய நாடுகளின் வெளியுறவுத்துறை கூட்டத்தில் முதன்முறையாக இந்தியா

இஸ்லாமிய நாடுகளின் வெளியுறவுத்துறை கூட்டத்தில் முதன்முறையாக இந்தியா
இஸ்லாமிய நாடுகளின் வெளியுறவுத்துறை கூட்டத்தில் முதன்முறையாக இந்தியா

இஸ்லாமிய நாடுகளின் வெளியுறவுத்துறை கூட்டத்தில் முதன்முறையாக இந்தியா 

இஸ்லாமிய நாடுகளுக்கான கூட்டமைப்பு சார்பாக நடைபெற உள்ள வெளியுறவுத்துறை அமைச்சர்களுக்கான கூட்டத்தில் முதன்முறையாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பங்கேற்கவுள்ளார்.

இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பான ‘ஆர்கனைசேஷன் ஆஃப் இஸ்லாமிக் கோ ஆபரேஷன்’ என்ற அமைப்பு 1969 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்தக் கூட்டமைப்பில் 57 நாடுகள் உறுப்பினராக உள்ளனர். இதன் தலைமையகம் சவுதி அரேபிய நாட்டின் ஜெட்டா நகரத்தில் உள்ளது. இந்த அமைப்பு உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்களின் நலனிற்காக பாடுபட்டு வருகிறது. 

இந்நிலையில் இந்த அமைப்பின் சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர்களின் கூட்டம் ஐக்கிய அரபு நாட்டில் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் பங்குபெற வருமாறு ஜக்கிய அரபு நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் இந்தியாவிற்கு அழைப்பு விடுத்துள்ளார். மார்ச் மாதம் 1 மற்றும் 2ஆம் தேதிகளில் இக்கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் பங்கேற்க உள்ளார். அத்துடன் கூட்டத்தில் உரையாற்றவும் உள்ளார். 

கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி காஷ்மீர் மாவட்டத்திலுள்ள புல்வாமாவில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி இருந்தனர். அதில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்தனர். இதனையடுத்து இந்தியா, பாகிஸ்தானுக்கு தனது கடும் கண்டனத்தை தெரிவித்தது. அத்துடன் பாகிஸ்தானை உலக அளவில் தனிமைப்படுத்த அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும் என்று கூறியிருந்தது. இதனையொட்டி சுஷ்மா சுவராஜ் இக்கூட்டத்தில் பங்கேற்கவுள்ளது அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இக்கூட்டத்தில்  பாகிஸ்தானுக்கு சில நாடுகள் கடும் கண்டனத்தை தெரிவிக்கலாம் என்றும் ஏதிர்பார்க்கப்படுகிறது.

இந்த இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பில்தான் ஏற்கெனவே பாகிஸ்தான், காஷ்மீர் விவகாரம் சம்பந்தமாக சிலமுறை இந்தியாவிற்கு கண்டனம் தெரிவித்து வந்துள்ளது. அத்துடன் இந்த அமைப்பு இந்தியாவிற்கு அளிக்கவிருந்த ‘பார்வையாளருக்கான தேசம்’என்ற அந்தஸ்த்தை பாகிஸ்தான் தர விடாமல் தடுத்து வந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com