இந்த வருடத்தின் முதல் சூப்பர் மூன் இன்று: இந்தியாவில் தெரியுமா?
இந்த வருடத்தின் முதல் சூப்பர் மூன் குறித்து நாசா சில தகவல்களை தெரிவித்துள்ளது.
ஸ்நோ மூன், ஸ்டோர்ம் மூன், ஹங்கர் மூன் என்று பல பெயர்களில் அழைக்கப்படும் சூப்பர் மூன் இன்றும் நாளையும் தெரியவுள்ளது. பிப்ரவரி மாதம் பூமியின் அருகில் நிலா வருவதால் நிலவானது பெரியதாகவும் வெளிச்சமாகவும் தெரியும். இதுவே சூப்பர் மூன் ஆகும். அதன்படி இந்த வருடத்திற்கான சூப்பர் மூன், வெள்ளிக்கிழமை முதல் திங்கள்கிழமை அதிகாலை வரை தெரியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சூப்பர் மூனை பார்க்க முடியாவிட்டாலும் அடுத்த மாதமும் வானில் வரும் முழு நிலா, சூப்பர் மூனாக இருக்கும் என்றே விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர். அதாவது மார்ச் 9-ம் தேதி வரும் முழு நிலவும் சூப்பர் மூனாகவே இருக்கும். அதன்பின் அடுத்த வருடம் பிப்ரவரி 27-ம் தேதி மீண்டும் சூப்பர் மூனை பார்க்கலாம்.
பெரியதாகவும் வெளிச்சமாகவும் தெரியும் சூப்பர் மூனை இந்தியாவில் சரியாக பார்க்க முடியாது என நாசா தெரிவித்துள்ளது. நிலா பூமியை நெருங்கி வரும் நேரம் இந்தியாவில் பகல் நேரமாக இருப்பதால் சூப்பர் மூனை இந்தியாவில் பார்க்க முடியாது என நாசா குறிப்பிட்டுள்ளது.