"2023-ம் நிதியாண்டில் இந்தியாவில் மந்தநிலை ஏற்படலாம்; ஆனாலும்..." IMFன் பாசிட்டிவ் கணிப்பு

"2023-ம் நிதியாண்டில் இந்தியாவில் மந்தநிலை ஏற்படலாம்; ஆனாலும்..." IMFன் பாசிட்டிவ் கணிப்பு
"2023-ம் நிதியாண்டில் இந்தியாவில் மந்தநிலை ஏற்படலாம்; ஆனாலும்..." IMFன் பாசிட்டிவ் கணிப்பு

2023ம் ஆண்டு இந்தியப் பொருளாதார வளர்ச்சி 6.1% ஆக இருக்கும் என சர்வதேச நாணய நிதியம் (ஐஎம்எஃப்) கணித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியமானது (ஐ.எம்.ஃஎப்) இன்று (ஜனவரி 31) சிங்கப்பூரில் உலகப் பொருளாதார வளர்ச்சி அறிக்கையின் புதுப்பிக்கப்பட்ட தவகல்களை வெளியிட்டது. அதன்படி, 2023ஆம் ஆண்டு இந்தியப் பொருளாதார வளர்ச்சி 6.1% ஆக இருக்கும் எனவும், 2024ஆம் ஆண்டு 6.8 ஆக உயரும் எனவும் அது கணித்துள்ளது. இந்தியப் பொருளாதாரம் இந்த நிதியாண்டில் மந்தநிலையை அடைந்தாலும் அதன்பிறகு உயரும் என தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சர்வதேச நிதியத்தின் ஆராய்ச்சித் துறை இயக்குநர், “கடந்த அக்டோபர் மாதம் வெளியிட்ட கணிப்பில் இருந்து இந்தியாவின் வளர்ச்சி கணிப்புகள் மாறவில்லை. நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.8 சதவீதமாக இருக்கும். இது, வரும் மார்ச் 31 வரை நீடிக்கும். பின்னர் 2023ஆம் நிதியாண்டில் 6.1 சதவீதமாகக் குறையும். அப்போது இந்தியப் பொருளாதார வளர்ச்சியில் சில மந்தநிலை ஏற்படும் என எதிர்பார்க்கிறோம். பின்னர், 2024ஆம் ஆண்டு 6.8 ஆக உயரும்” என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், 2023ஆம் ஆண்டு உலகப் பொருளாதார வளர்ச்சி 2.9 சதவீதமாக இருக்கும் எனவும், 2024ஆம் ஆண்டு அதன் வளர்ச்சி 3.1சதவீதமாக உயரும் எனவும் ஐ.எம்.ஃஎப் மதிப்பீடு செய்துள்ளது. 2023ஆம் ஆண்டில் சீனப் பொருளாதார வளர்ச்சி விகிதம் 4.4 சதவீதத்தில் இருந்து 5.2 சதவீதமாக உயரும் என இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதாக கூறி, பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகள் வட்டியை உயர்த்தியுள்ளதையும் உக்ரைன் – ரஷ்யா இடையே மோதல் நீடிப்பதையும் சுட்டிக்காட்டி, அவை பொருளாதார செயல்பாடுகளுக்கு அழுத்தங்களை ஏற்படுத்தியுள்ளதாக ஐ.எம்.எஃப் கூறியுள்ளது. உலகளாவிய பணவீக்கம், 2023 மற்றும் 2024ஆம் ஆண்டு முறையே 6.6 சதவீதம் மற்றும் 4.3 சதவீதமாக இருக்கும் என்றும் அறிக்கையில் மதிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com