\
“பாக். பத்திரிகை செய்தி உண்மையில்லை” - இந்திய வெளியுறவுத்துறை

“பாக். பத்திரிகை செய்தி உண்மையில்லை” - இந்திய வெளியுறவுத்துறை

“பாக். பத்திரிகை செய்தி உண்மையில்லை” - இந்திய வெளியுறவுத்துறை
Published on

பாகிஸ்தான் உடன் பேச்சுவார்த்தையை மேற்கொள்ள இந்தியா தயாராக உள்ளது என்ற பாகிஸ்தான் ஊடக செய்திக்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானிலிருந்து வெளிவரும் எக்ஸ்பிரஸ் டிரிப்யூன் பத்திரிகையில், இந்திய பிரதமர் மோடியும், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும் பாகிஸ்தானுடன் பேச்சு நடத்த ஆர்வமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு வெளியுறவுத் துறை செய்திதொடர்பாளர் ராவேஷ் குமார் விளக்கம் அளித்துள்ளார். 

பாகிஸ்தான் பத்திரிகையில் வெளியாகியுள்ள செய்தியில் உண்மையில்லை எனவும் பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்ட வாழ்த்துக்கு பிரதமர் மோடியும், ஜெய்சங்கரும் பரஸ்பரம் வாழ்த்து தெரிவித்தனர் எனவும் ‌ராவேஷ் குமார் விளக்கினார். 

பிரதமர் மோடியின் கடிதத்தில் பயங்கரவாதத்தின் நிழல் இல்லாத சூழலை உருவாக்குவது அவசியம் என்று குறிப்பிட்டிருந்ததாகவும் இருநாடுகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடத்துவது குறித்த எந்தவிதமான பதிலையும், கருத்தையும் பிரதமர் மோடி தெரிவிக்கவில்லை எனவும் ராவேஷ் குமார் தெரிவித்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com