ட்ரம்ப், மோடி
ட்ரம்ப், மோடிபுதியதலைமுறை

இந்தியாவுக்கு ஏன் நிதி வழங்க வேண்டும்? - ட்ரம்ப் எழுப்பிய முக்கிய கேள்வி

இந்தியா மீதும், பிரதமர் மோடி மீதும் தனக்கு மிகுந்த மரியாதை உள்ளது - டிரம்ப்
Published on

இந்தியாவில் வாக்காளர்களின் பங்களிப்பை அதிகரிக்க ஒதுக்கப்பட்ட 21 மில்லியன் டாலர் நிதியை ரத்து செய்யும்
முடிவை, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் உறுதிபடுத்தி உள்ளார்.

இதுகுறித்து உரையாற்றிய ட்ரம்ப், இந்தியாவிடம் அதிக பணம்
இருக்கும்போது, நாம் ஏன் 21 மில்லியன் டாலர் நிதி வழங்க வேண்டும் என கேள்வி எழுப்பினார். அமெரிக்க பொருட்களுக்கு அதிக இறக்குமதி வரியை விதித்துவரும் நாடுகளில் ஒன்றாக இந்தியா விளங்குவதாக குறிப்பிட்ட அவர், இதனால் அங்கு
பொருட்களை ஏற்றுமதி செய்வது கடினமானதாக இருப்பதாக
தெரிவித்தார்.

இந்தியா மீதும், பிரதமர் மோடி மீதும் தனக்கு மிகுந்த மரியாதை
உள்ளதாக கூறிய அவர், இருப்பினும், வாக்கு சதவீதத்தை அதிகரிக்கச் செய்ய, இந்தியாவுக்கு 21 மில்லியன் டாலர் நிதியை வழங்க வேண்டுமா என கேள்வி எழுப்பி உள்ளார்.

"CONSORTIUM FOR ELECTIONS AND POLITICAL PROCESS STRENGTHENING" என பட்டியலிட்டு, அதன்கீழ் இந்தியாவில் வாக்கு
சதவீதத்தை அதிகரிக்கும் பணிகளுக்காக 21 மில்லியன் டாலர் நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. இதை ரத்து செய்வதாக அதிபரின் ஆலோசகர் எலான் மஸ்க் சமீபத்தில் தெரிவித்திருந்த நிலையில், அதை மீண்டும் உறுதிபடுத்தும் வகையில் ட்ரம்ப் பேசி உள்ளார்.

"இந்தியாவிடம் அதிக பணம் உள்ளது; நாம் ஏன் 21மில்லியன் டாலர் நிதியை வழங்கவேண்டும்?அமெரிக்காவுக்கு அதிக இறக்குமதி வரி விதிக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா
உள்ளது. இந்தியா மீதும், பிரதமர் மோடி மீதும் எனக்கு  மரியாதை உள்ளது
”என அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com