”ஐநா தீர்மானத்தில் எங்களுக்கு ஆதரவு அளிப்பதாக இந்தியா உறுதியளித்துள்ளது” - இலங்கை

”ஐநா தீர்மானத்தில் எங்களுக்கு ஆதரவு அளிப்பதாக இந்தியா உறுதியளித்துள்ளது” - இலங்கை
”ஐநா தீர்மானத்தில் எங்களுக்கு ஆதரவு அளிப்பதாக இந்தியா உறுதியளித்துள்ளது” - இலங்கை

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் இந்தியா எங்களுக்கான ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளது என்று இலங்கை வெளியுறவு செயலாளர் ஜெயநாத் கொலம்பேஜ் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை மீதான மனித உரிமைகள் மீறல்கள் புகார் குறித்த புதிய தீர்மானத்தின் மீது உறுப்பு நாடுகள் மார்ச் 22 ஆம் தேதி வாக்களிக்க உள்ளன. வாக்களிப்புக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் வட்டாரங்கள், இத்தீர்மானத்தில் வாக்களிப்பது குறித்து எந்தவொரு முடிவும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில், இந்தியா தங்களது ஆதரவு அளிப்பதாக உறுதி அளித்துள்ளது என்று இலங்கையின் வெளியுறவுச் செயலாளர் ஜெயந்த் கொலம்பேஜ் கூறியுள்ளார்.

இங்கிலாந்து, கனடாவை உள்ளடக்கிய ஒரு 'முக்கிய குழு' , ஜெர்மனி, வடக்கு மாசிடோனியா, மலாவி மற்றும் மாண்டினீக்ரோ உள்ளிட்ட நாடுகள்தான் இந்த புதிய தீர்மானத்தை கொண்டு வந்துள்ளது. இதற்கிடையில், கடந்த வாரங்களில் அனைத்து உறுப்பு நாடுகளிடமும் தனது நிலையை விளக்கி இலங்கை ஆதரவு திரட்டி வருகிறது. இந்த அவையில் 47 உறுப்பு நாடுகள் உள்ளன.

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச, சீன அதிபர் ஜி ஜின்பிங், இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல நாடுகளின் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்நிலையில் சீனா தனது ஆதரவை இலங்கைக்கு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com