\
கச்சா எண்ணெய்
கச்சா எண்ணெய்X

ஆகஸ்ட்டில் இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி.. ட்ரம்ப்பின் அழுத்ததால் சரிந்ததா ரஷ்ய இறக்குமதி?

இந்தியாவின் மொத்தக் கச்சா எண்ணெய் இறக்குமதியில் ரஷ்யா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் அமெரிக்கா ஆகிய மூன்று நாடுகளே சுமார் 67 சதவீத பங்கு வகிப்பதாகப் புதிய தரவுகள் தெரிவிக்கின்றன.
Published on: 

இந்தியாவின் மொத்தக் கச்சா எண்ணெய் இறக்குமதியில் ரஷ்யா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் அமெரிக்கா ஆகிய மூன்று நாடுகளே சுமார் 67 சதவீத பங்கு வகிப்பதாகப் புதிய தரவுகள் தெரிவிக்கின்றன. இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியில் ரஷ்யாவின் பங்கு சரிந்தாலும் அந்நாடே தொடர்ந்து இந்தியாவின் முதன்மை விநியோகஸ்தராக நீடிக்கிறது.

கச்சா எண்ணெய்
கச்சா எண்ணெய்Pt web

ஆகஸ்ட் 2026இல் இந்தியாவின் மொத்த எண்ணெய் இறக்குமதி 191 புள்ளி 2 லட்சம் டன்களாகப் பதிவாகியுள்ளது. இதில் ரஷ்யாவிலிருந்து 84.8 லட்சம் டன் எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்துள்ளது. மொத்த இறக்குமதியில் ரஷ்யாவின் பங்கு 44.3 சதவீதம் ஆகும். அமீரகத்திலிருந்து 33 லட்சம் டன் எண்ணெய்யும் அமெரிக்காவிடமிருந்து 9.7 லட்சம் டன் எண்ணெய்யும் இந்தியா இறக்குமதி செய்துள்ளது. இவ்விரு நாடுகளும் இந்தியாவின் எண்ணெய் இறக்குமதியில் முறையே 17.4 சதவீதம் மற்றும் 5.1 சதவீதம் பங்கு வகிக்கின்றன.

ஜூலை மாதத்தில் ரஷ்யாவிடமிருந்து இந்தியா 110 லட்சம் டன் எண்ணெய் இறக்குமதி செய்திருந்தது. ஆகஸ்ட் மாதத்தில் அது 23 சதவீதம் வரை குறைந்துள்ளது. மொத்த இறக்குமதியில் ரஷ்யாவின் பங்கு ஜூலை மாதத்தில் 51 சதவீதமாக இருந்த நிலையில் ஆகஸ்ட் மாதத்தில் 6.7 சதவீதம் சரிந்துள்ளது.

அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பு அழுத்தம் காரணமாக ரஷ்யாவிடமிருந்து வாங்கப்படும் எண்ணெய்யின் அளவு குறைந்தாலும் ரஷ்யாவே இந்தியாவின் முதன்மை எண்ணெய் விநியோகஸ்தராக நீடிக்கிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com