இந்தியர்களின் சமையலறை வரை தாக்கத்தை ஏற்படுத்தும் உக்ரைன் - ரஷ்யா போர்!

இந்தியர்களின் சமையலறை வரை தாக்கத்தை ஏற்படுத்தும் உக்ரைன் - ரஷ்யா போர்!

இந்தியர்களின் சமையலறை வரை தாக்கத்தை ஏற்படுத்தும் உக்ரைன் - ரஷ்யா போர்!

உக்ரைன் - ரஷ்யா போர் காரணமாக சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதி பாதிக்கப்பட்டு விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் இந்தியாவில் 35 லட்சம் டன் சூரியகாந்தி எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. சூரியகாந்தி எண்ணெய் ஏற்றுமதியில் ரஷ்யா 20 சதவிகித பங்கு வகிக்கும் நிலையில், உக்ரைன் உலகிலேயே அதிகபட்சமாக 70 சதவிகித பங்கு வகிக்கிறது. இதன்மூலம், உலகின் மொத்த சூரியகாந்தி எண்ணெய் ஏற்றுமதியில் இந்த இரண்டு நாடுகள் மட்டுமே 90 சதவிகித இடம் வகிக்கின்றன. கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரை இந்தியாவின் கச்சா சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதியில் உக்ரைனிடம் வாங்கியது 65 சதவிகிதமாக இருந்தது. மொத்தம் 15 ஆயிரம் கோடி ரூபாய்க்கு கச்சா சூரியகாந்தி எண்ணெய் உக்ரைனில் இருந்து 9 மாதங்களில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

பொதுவாக, இறக்குமதி செய்யும் கச்சா சூரியகாந்தி எண்ணெய் மூலம், சுத்திகரிப்பு நிறுவனம் 40 முதல் 45 நாட்களுக்கு விற்பனைக்குத் தேவையான இருப்பை வைத்திருக்கும். எனவே, உக்ரைன் - ரஷ்யா இடையேயான போரால் அடுத்த சில வாரங்களுக்கு இந்தியாவில் சூரியகாந்தி எண்ணெய் இருப்பில் பிரச்னை எழவாய்ப்பில்லை. எனினும், போர் நீடிக்கும் நாட்கள், ரஷ்யா, உக்ரைனில் ஏற்றுமதி பாதிக்கப்படும் சூழல்களைப் பொருத்து இந்தியாவின் கச்சா சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதி பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. அதைத் தொடர்ந்து, சூரியகாந்தி எண்ணெய் விற்பனை விலை உயர வாய்ப்புள்ளது. அதேநேரம், போரால் உக்ரைனின் கோதுமை ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய கோதுமைக்கு மற்ற நாடுகளில் தேவை உயர்ந்துள்ளதால் கோதுமை ஏற்றுமதி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com