உலகம்
‘இணைய வழித் தாக்குதலால் கூடங்குளத்திற்கு பாதிப்பு இல்லை’ - இந்தியா விளக்கம்
‘இணைய வழித் தாக்குதலால் கூடங்குளத்திற்கு பாதிப்பு இல்லை’ - இந்தியா விளக்கம்
இணைய வழித் தாக்குதலால் கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு பாதிப்பு இல்லை என ரஷ்யாவிடம் இந்தியா தெரிவித்துள்ளது.
இந்தியா-ரஷ்யா கூட்டு முயற்சியில் தமிழகத்தில் கூடங்குளம் அணுமின் நிலையம் இயங்கிவருகிறது. இந்த நிலையில் கூடங்குளத்தில் இணைய வழித் தாக்குதல் நடந்ததாக தகவல் வெளியானது. இந்த நிலையில், கூடங்குளம் அணுமின் நிலைய பாதுகாப்பு குறித்து ரஷ்யாவிடம் இந்தியா விளக்கமளித்துள்ளது.
இணைய வழித் தாக்குதலால், அணுவுலையின் கட்டுப்பாட்டு அமைப்புகள் ஏதும் பாதிக்கப்படவில்லை எனவும் அணுவுலை பாதுகாப்பாகத்தான் இருக்கிறது எனவும் ரஷ்யாவிடம் இந்திய தூதரகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இதுபோன்று தாக்குதல் நடக்காமலிருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் இந்திய அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.