`பாக்.,-ல் சிறுபான்மையினர் உரிமைகள் கடுமையாக மீறல்’-ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

`பாக்.,-ல் சிறுபான்மையினர் உரிமைகள் கடுமையாக மீறல்’-ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு
`பாக்.,-ல் சிறுபான்மையினர் உரிமைகள் கடுமையாக மீறல்’-ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

பாகிஸ்தானில் சிறுபான்மையினரின் உரிமைகள் தொடர்ந்து கடுமையாக மீறப்படுவதாக ஐ.நா.வில் இந்தியா குற்றம்சாட்டியுள்ளது.

சிறுபான்மையினரின் உரிமைகள் தொடர்பான ஐ.நா.வின் உயர்மட்டக் கூட்டம் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்றது. இதில் ஐ.நா.வுக்கான பொருளாதாரம் மற்றும் சமூகத்திற்கான இந்தியாவின் இணைச் செயலாளர் ஸ்ரீனிவாஸ் கோட்ரூ பேசினார். அப்போது, இந்தியாவில் சிறுபான்மையினர் மற்றும் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி பேசியதற்கு பதிலடி கொடுத்தார்.

பாகிஸ்தானில் சிறுபான்மையினர்களான சீக்கியர்கள், இந்துக்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் அகமதியர்களின் உரிமைகள் கடுமையாக மீறப்படுவதாகவும், ஆனால் இங்கு அவர்களின் உரிமைகள் குறித்து பாகிஸ்தான் பேசுவது முரண்பாடாகவும் நகைப்புக்குரியதாகவும் உள்ளதாக ஸ்ரீனிவாஸ் கோட்ரூ தெரிவித்தார்.

சிறுபான்மையினரின் உரிமைகள் குறித்த விவகாரத்தை ஐ.நா.வுக்கு பாகிஸ்தான் கொண்டு வந்திருப்பது ஆச்சரியமளிப்பதாகவும், உலகம் இதுவரை கண்டிராத உரிமைகளை கடுமையாக மீறும் நீண்ட வரலாற்றை அந்நாடு கொண்டிருப்பதாகவும் இந்திய பிரதிநிதி ஸ்ரீனிவாஸ் கோட்ரூ கடுமையாக குற்றம்சாட்டினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com