உலகின் 6-வது பணக்கார நாடு இந்தியா.. சொத்து மதிப்பு தெரியுமா?
உலகிலேயே பணக்கார நாடுகள் பட்டியலில் 6-வது இடத்தை இந்தியா பிடித்துள்ளது. தனிநபர் சொத்து, நிதி ஆதாரம், பங்குகள், நிறுவனங்களின் வளர்ச்சி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
உலக பணக்கார நாடுகள் ஆய்வுப் பட்டியலை நியூ வோர்ல்ட் வெல்த் ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் அமெரிக்கா முதலிடத்திலும் சீனா இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளது. இதையடுத்து மூன்றாம் இடத்தில் ஜப்பான் உள்ளது. இதனை தொடர்ந்து பிரிட்டன் 4-வது இடத்திலும் ஜெர்மனி 5-வது இடத்தில் உள்ளன. 8,230 பில்லியன் சொத்து மதிப்புடன் இந்தியா 6- வது இடத்தைப் பிடித்துள்ளது. இதன் மொத்த சொத்து மதிப்பு 8,230 பில்லியன் அமெரிக்க டாலர்கள். அடுத்தடுத்த இடங்களை கனடா, ஆஸ்திரேலியா, இத்தாலி நாடுகள் பெற்றுள்ளன.
கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி கிடுகிடுவென உயர்ந்தாலும் இந்தியாவின் 67 சதவிகித சொத்து ஒரு சதவிகித இந்தியர்களிடமே முடங்கியுள்ளது என ஆய்வுகள் தெரிவிப்பது அதிர்ச்சியாகவே உள்ளது.
கடந்த ஆண்டைவிட இந்தியாவின் சொத்து மதிப்பு 25 சதவிகிதம் வளர்ச்சியடைந்துள்ளதாக ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. 2016-ம் ஆண்டு இந்தியாவின் சொத்து மதிப்பு 6,584 கோடி அமெரிக்க டாலர்களாக இருந்தது. ஒரே ஆண்டில் 8,230 கோடியாக உயர்ந்துள்ளது.