இந்தியா - பிலிப்பைன்ஸ் இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு, விவசாயம் உட்பட நான்கு துறைகளில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி - பிலிப்பைன்ஸ் அதிபர் துதர்த்தே இடையேயான பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாக இருந்ததாக, இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வெளியுறவுத் துறை செயலாளர்களில் ஒருவரான பிரீத்தி சரண் தெரிவித்துள்ளார்.
கடந்த 36 ஆண்டுகளில் பிலிப்பைன்ஸ் நாட்டிற்குச் சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடிதான் என்றும் பிரீத்தி கூறினார். இந்தியாவுடன் நல்லுறவைப் பேண விரும்புவதாக மோடியிடம் பிலிப்பைன்ஸ் அதிபர் கூறியதாகவும் பிரீத்தி சரண் தெரிவித்தார்.