உலகம்
எல்லையில் போர்மேகம்: சீன படைகள் பின்வாங்க பாதுகாப்பு அமைச்சர் வலியுறுத்தல்
எல்லையில் போர்மேகம்: சீன படைகள் பின்வாங்க பாதுகாப்பு அமைச்சர் வலியுறுத்தல்
பூடான் பகுதியில் நிலைகொண்டுள்ள சீனப் படைகள் பின் வாங்க வேண்டுமென பாதுகாப்புத்துறை இணையமைச்சர் சுபாஷ் பாம்ரே தெரிவித்துள்ளார். எல்லையில் படைக்குவிப்பு விவகாரத்தில் இருநாட்டு தூதரகங்கள் பேசி தீர்வு காண முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
எல்லையில் படைக்குவிப்பு விவகாரத்தில் சமரசத்துக்கே இடமில்லை என்றும் இதில் தவறு நேரும் பட்சத்தில் அது போருக்கு வழிவகுக்கும் என இந்தியாவுக்கான சீன தூதர் எச்சரித்திருந்த நிலையில் அமைச்சரின் கருத்து வெளியாகியுள்ளது. இந்தியா, பூடான், சீனாவின் எல்லைகள் சந்திக்கும் டோகலாம் பகுதியில் இந்திய, சீன படைகள் கடந்த 20 நாட்களாக நிலைகொண்டுள்ளதால் பதற்றம் உருவாகியுள்ளது. இதற்கிடையில் இந்தியாவிற்கு தனது குடிமக்கள் செல்ல தடை விதிப்பது பற்றி பரிசீலித்துவருவதாக சீனா தெரிவித்துள்ளது.