உலகம்
கொரோனா பரவல் அதிகரிப்பு : ஜெர்மனியில் 5 நாள் முழு பொதுமுடக்கம்
கொரோனா பரவல் அதிகரிப்பு : ஜெர்மனியில் 5 நாள் முழு பொதுமுடக்கம்
கொரோனா பரவல் காரணமாக ஜெர்மனியில் 5 நாள் முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட உள்ளது. ஏற்கனவே அங்கு பொதுமுடக்கம் அமலில் உள்ள சூழலில், ஈஸ்டர் பண்டிகை விடுமுறையின் போது முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
அதன்படி, ஏப்ரல் 1 முதல் 5ஆம் தேதி வரை முழு முடக்கம் அமலில் இருக்கும் என்பதால், அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கும் கடைகள் ஒரு நாள் மட்டும் திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 5 நாட்களும் மக்கள் பொது இடங்களில் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசி மையங்கள் திறந்திருக்கும் என கூறப்பட்டுள்ளது. தேவாலயங்கள் ஈஸ்டர் நிகழ்ச்சிகளை ஆன்லைனில் நடத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.