உலகம்
ஸ்பெயின்: 3 மாதங்களாக நெருப்பு குழம்பை உமிழ்ந்த எரிமலை சற்றே ஓய்ந்தது
ஸ்பெயின்: 3 மாதங்களாக நெருப்பு குழம்பை உமிழ்ந்த எரிமலை சற்றே ஓய்ந்தது
ஸ்பெயினில் கடந்த 3 மாதங்களாக நெருப்பு குழம்பை உமிழ்ந்த எரிமலை சற்றே ஓய்ந்துள்ளது.
லா பாமா தீவில் உள்ள எரிமலை கடந்த செப்டம்பர் 19 ஆம் தேதி வெடிக்கத் தொடங்கியது. மலையிலிருந்து எரிமலை குழம்பு ஆறாக ஓடி ஊருக்குள் புகுந்ததில், பல இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் சாம்பலில் மூழ்கின. வாழைத் தோப்புகள் முற்றிலும் சேதமடைந்தன.
3 மாதமாக லாவாவை வெளியேற்றிய எரிமலை தற்போது ஓய்ந்துள்ளது. இதையடுத்து அங்கு மீட்பு பணிகளை ராணுவ வீரர்கள் தொடங்கியுள்ளனர். எரிமலை ஓய்ந்திருந்தாலும் அது எப்போது வேண்டுமானாலும் மீண்டும் வெடிக்கலாம் என அறிவியலாளர்கள் எச்சரித்துள்ளனர்.
இதையும் படிக்க: இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை