பிரதமர் மோடியை, குடியரசுத் தலைவர் என்ற இம்ரான் கான்: சமூக வலைத்தளங்களில் கிண்டல்

பிரதமர் மோடியை, குடியரசுத் தலைவர் என்ற இம்ரான் கான்: சமூக வலைத்தளங்களில் கிண்டல்

பிரதமர் மோடியை, குடியரசுத் தலைவர் என்ற இம்ரான் கான்: சமூக வலைத்தளங்களில் கிண்டல்
Published on

ஐநா சபையில் முதல்முறை உரையாற்றிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், இந்திய பிரதமர் மோடியை, குடியரசுத் தலைவர் எனக் கூறியதால் சமூகவலைத்தளங்களில் அவரை கிண்டல் அடித்து வருகின்றனர்.

ஐக்கிய நாடுகள் சபையின் 74-வது கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பேசினார். இந்தக் கூட்டத்தில் உலக நாடுகளின் தலைவர்கள் பேச 15 முதல் 20 நிமிடங்கள் நேரம் ஒதுக்கப்பட்டது. ஆனால், இம்ரான் கான் அவருக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தை விட 2 மடங்கு அதிகமாக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 50 நிமிடங்கள் பேசிய அவர், பாதிக்கு மேல் இந்தியா மற்றும் காஷ்மீர், அணுஆயுதங்கள் பற்றியே திரும்பத் திரும்பப் பேசியது பார்வையாளர்களை கவரவில்லை. மேலும், பிரதமர் மோடியை அவர் இந்திய குடியரசுத் தலைவர் எனக் கூறினார். இதையடுத்து சமூக வலைத்தளங்களில் அவரை கிண்டலடித்து வருகின்றனர்.

கடந்த ஏப்ரலில் ஈரான் அதிபருடன் நடந்த செய்தியாளர் சந்திப்பில் ஜெர்மனியும், ஜப்பானும் எல்லையை ஒட்டிய நாடுகள் என இம்ரான்கான் குறிப்பிட்டது சமூக வலைத் தளங்களில் அதிகம் கிண்டலடிக்கப்பட்ட நிலையில், இப்போதும் இதுவும் கிண்லடிக்கப்பட்டு வருகிறது. 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com