உலகம்
நவம்பரில் ட்ரம்ப் சீனா, ஜப்பான், தென்கொரியாவில் சுற்றுப்பயணம்
நவம்பரில் ட்ரம்ப் சீனா, ஜப்பான், தென்கொரியாவில் சுற்றுப்பயணம்
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் வரும் நவம்பரில் ஆசிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அப்போது சீனா, ஜப்பான் மற்றும் தென் கொரியா நாடுகளுக்கு அவர் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இர்மா புயலால் பாதிப்படைந்த ஃபுளோரிடா மாகாணத்தை பார்வையிடுவதற்காக வாஷிங்டனில் இருந்து புறப்பட்ட ட்ரம்ப் தனது ஏர் போர்ஸ் விமானத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ‘நவம்பரில் 10 நாட்கள் ட்ரம்ப் சீனா, ஜப்பான், தென்கொரியா உள்ளிட்ட ஆசிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறேன். ஈரான் உடனான அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான தனது முடிவை வரும் அக்டோபர் மாதம் அறிவிக்கவுள்ளேன்’ எனத் தெரிவித்தார்.