\
காபூல் தற்கொலைத் தாக்குதல்: பலியானோர் எண்ணிக்கை 46 ஆக உயர்வு

காபூல் தற்கொலைத் தாக்குதல்: பலியானோர் எண்ணிக்கை 46 ஆக உயர்வு

காபூல் தற்கொலைத் தாக்குதல்: பலியானோர் எண்ணிக்கை 46 ஆக உயர்வு
Published on: 

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள கல்வி நிலையத்தில் நிகழ்த்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை நிகழ்ந்த தற்கொலைப் படை தாக்குதலில் 20 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது இறந்தவர்களின் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்துள்ளது. மருத்துவமனையில் 83 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த தாக்குதலைக்
கண்டித்து, ஆப்கானிஸ்தானின் ஹசாரா சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த பெண்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். கறுப்பு உடை அணிந்து அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com