உலகம்
பாகிஸ்தான் டிவியில் முதல்முறையாக செய்தி வாசித்த திருநங்கை..!
பாகிஸ்தான் டிவியில் முதல்முறையாக செய்தி வாசித்த திருநங்கை..!
பாகிஸ்தானில் தொலைக்காட்சி செய்தியை திருநங்கை ஒருவர் முதல்முறையாக தொகுத்து வழங்கியுள்ளார்.
திருநங்கைகள் தங்களுடைய பாலின அடையாளத்தை முடிவு செய்துகொள்ளும் அதிகாரம், பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டை உயர்த்திக் கொள்ள மசோதா ஒன்றை பாகிஸ்தான் செனட் அவை சமீபத்தில் நிறைவேற்றியது. இந்நிலையில் பாகிஸ்தானில் தொலைக்காட்சி செய்தியை திருநங்கை ஒருவர் முதல்முறையாக தொகுத்து வழங்கியுள்ளார். செய்தி வாசித்த திருநங்கை பெயர் மாவியா மாலிக். இவர் கோஹினூர் என்கிற தனியார் தொலைக்காட்சியில் செய்திகளை வாசித்துள்ளார்.
இதனிடைய முதன் முறையாக செய்தியை தொகுத்து வழங்கிய மாவியா மாலிக்கிற்கு ஏராளமானோர் வாழ்த்துகளை தெரிவிப்பதோடு மனதார பாராட்டியுள்ளனர்.