"இந்தியாவின் முடிவுகள் மக்களுக்கானது" - பாராட்டிய பாகிஸ்தானின் இம்ரான் கான்

"இந்தியாவின் முடிவுகள் மக்களுக்கானது" - பாராட்டிய பாகிஸ்தானின் இம்ரான் கான்
"இந்தியாவின் முடிவுகள் மக்களுக்கானது" - பாராட்டிய பாகிஸ்தானின் இம்ரான் கான்

லாகூரில் நடைபெற்ற பேரணியில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை மீண்டும் பாராட்டியுள்ளார்.

லாகூரில் நடைபெற்ற பேரணியில் பேசிய பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை மீண்டும் பாராட்டிப் பேசினார். “அமெரிக்காவின் நண்பனாக சொல்லிக் கொள்ளும் இந்தியா, ஒரு சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையை கடைபிடிக்கிறது. பொருளாதார தடைகளை தாண்டி ரஷ்யாவில் இருந்து பெட்ரோலை இறக்குமதி செய்கிறது. அந்த நாட்டின் முடிவுகள் மக்களின் முன்னேற்றத்தை அடிப்படையாகக் கொண்டவை. ஆனால் நம் நாட்டின் கொள்கை ஒரு சிலரின் முன்னேற்றத்தை அடிப்படையாக கொண்டது.” என்று பேசினார் இம்ரான் கான்.

மேலும் அவர் “நான் ரஷ்யா சென்றது பணவீக்கத்தை கட்டுப்படுத்தவே! ரஷ்யா 30% தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் வழங்கியதால் அதை வாங்க திட்டமிட்டேன். பாகிஸ்தானுக்கான தனி சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையை கடைபிடிக்க எண்ணினேன். சீனாவுட வர்த்தகத்தை படிப்படியாக அதிகரிக்க முடிவெடுத்தேன். ஆனால் இது எதுவும் வெளிநாட்டு சக்திகளுக்கு பிடிக்கவில்லை. அதனால் சதித் திட்டம் தீட்டி என்னை பொறுப்பில் இருந்து அகற்றி விட்டனர்” என்று கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com