இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் உறையாற்றிய மோடி
இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் உறையாற்றிய மோடிweb

"இனி சகித்து கொள்ளவே முடியாது.." இஸ்ரேலில் நின்று கர்ஜித்த PM மோடி! உற்று நோக்கும் உலக நாடுகள்!

உலகில் எந்தவொரு மூலையில் பயங்கரவாதம் இருந்தாலும் அது அனைத்து இடங்களிலும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்பதால் பயங்கரவாதத்தை ஒழிக்க வேண்டுமென பிரதமர் மோடி இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் சூளுரைத்துள்ளார்.. அடுத்தது அவர் பேசியது என்ன பார்க்கலாம்!
Published on
Summary

இஸ்ரேலில் பயங்கரவாத தாக்குதலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்த பிரதமர் மோடி, பயங்கரவாதத்தை எந்த காரணத்திற்கும் நியாயப்படுத்த முடியாது எனக் கூறினார். இந்தியாவும் இஸ்ரேலின் வலியை உணர முடியும் என ஆறுதல் கூறிய அவர், உலகளாவிய நடவடிக்கைகள் தேவைப்படுவதாகவும், இந்தியா உறுதுணையாக இருக்கும் என உறுதியளித்தார்.

இரண்டு நாள் சுற்று பயணமாக இஸ்ரேல் சென்றுள்ள பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.. இதனைத்தெடர்ந்து ஜெருசலேமில் உள்ள அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார்..

இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் உறையாற்றிய மோடி
இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் உறையாற்றிய மோடி

அப்போது பேசி அவர், "இஸ்ரேலில் ஹமாஸ் அமைப்பினர் நடத்திய கொடூர தாக்குதலில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்து வாடும் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.. பயங்கரவாதத்தால் இஸ்ரேலியர்களுக்கு ஏற்பட்ட வலியை இந்தியாவால் உணர முடியும் என ஆறுதல் தெரிவித்தார்..

அதுமட்டுமின்றி, எந்த காரணத்தை கொண்டும் அப்பாவி மக்கள் கொல்லப்படுவதை நியாயப்படுத்த முடியாது என்றும், அதே சமயம் பயங்கரவாதத்தை நியாயப்படுத்த முடியாது.. நீண்ட காலத்துக்கு முன்பு இந்தியாவும் பயங்கரவாதத்தால் ஏற்பட்ட வலியை உணர்ந்துள்ளது.. இஸ்ரேலை போல இந்தியாவும் இரட்டை நிலைப்பாடு இல்லாமல் பயங்கரவாதத்தை எள்ளளவும் சகித்துக் கொள்ளக் கூடாது என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுக்க ஒருங்கிணைந்த உலகளாவிய நடவடிக்கை தேவைப்படுகிறது என்றும், உலகின் எந்தவொரு மூலையில் பயங்கரவாதம் இருந்தாலும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்பதால் பயங்கரவாதத்திற்கு எதிரான அனைத்து முயற்சிகளுக்கும் இந்தியா உறுதுணையாக இருக்கும் என சூளுரைத்தார்.

இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் உறையாற்றிய மோடி
இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் உறையாற்றிய மோடி

ஐநா பாதுகாப்பு கவுன்சில் முறைப்படி அங்கீகரித்த காசா அமைதி திட்டத்திற்கு தனது ஆதரவை இந்தியா தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com