சட்ட விரோதக் குடியேற்றம் குறைந்தது: ட்ரம்புக்கு அதிகாரிகள் புகழாரம்
டொனால்ட் ட்ரம்ப் அதிபராகப் பதவியேற்ற பிறகு மெக்சிகோவில் இருந்து அமெரிக்காவுக்குள் நுழைவோரின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்திருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் கூறியுள்ளனர்.
அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பிறகு, பல்வேறு அதிரடி மாற்றங்களை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், ஈராக், சிரியா, ஈரான், லிபியா, சோமாலியா, சூடான், ஏமன் ஆகிய 7 இஸ்லாமிய நாடுகள் அமெரிக்காவில் நுழைய தடை விதித்தார். டிரம்ப்பின் உத்தரவுக்கு அந்நாட்டு நீதிமன்றம், இடைக்கால தடை விதித்தன.
இந்நிலையில், புதிய நிர்வாகத்தின் கடுமையான கொள்கைகளே சட்ட விரோதக் குடியேற்றம் குறைந்ததற்குக் காரணம் என்றும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு ஜனவரி - பிப்ரவரி மாதத்தில் 31 ஆயிரம் பேர் மெக்சிகோவில் இருந்து அமெரிக்காவுக்குள் வந்ததாகவும், இந்த எண்ணிக்கை நடப்பாண்டில் 18 ஆயிரமாகக் குறைந்திருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.