\
உடல்நலக் குறைவு: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அரண்மனை திரும்பிய  ராணி எலிசபெத்

உடல்நலக் குறைவு: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அரண்மனை திரும்பிய ராணி எலிசபெத்

உடல்நலக் குறைவு: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அரண்மனை திரும்பிய ராணி எலிசபெத்
Published on

பிரிட்டன் மகாராணி எலிசபெத்துக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் லண்டனில் உள்ள கிங் எட்வர்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராணி எலிசபெத்துக்கு ஆரம்ப கட்ட சிகிச்சை, மருத்துவ சோதனைகளுக்குப் பின் மீண்டும் அரண்மனைக்கு திரும்பியதாக, பக்கிங்காம் அரண்மனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதா? அல்லது வேறு பிரச்னைகளா என்பது குறித்து தகவல்கள் வெளியிடப்படவில்லை. தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், சில நாட்களுக்கு முழு ஓய்வில் இருக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனால், தனது அயர்லாந்து பயணத்தை மகாராணி எலிசபெத் ரத்து செய்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com