"சீனாவை ஒடுக்க நினைத்தால் தலையை அடித்து நொறுக்குவோம்" - ஷீ ஜின்பிங் எச்சரிக்கை

"சீனாவை ஒடுக்க நினைத்தால் தலையை அடித்து நொறுக்குவோம்" - ஷீ ஜின்பிங் எச்சரிக்கை
"சீனாவை ஒடுக்க நினைத்தால் தலையை அடித்து நொறுக்குவோம்" - ஷீ ஜின்பிங் எச்சரிக்கை

சீனாவை ஒடுக்க நினைத்தால் அவர்களின் தலையை இரும்பு பெருஞ்சுவரில் அடித்து நொறுக்குவோம் என அந்நாட்டு அதிபர் ஷீ ஜின்பிங் எச்சரிக்கை விடுத்துள்ளார். சீனா கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழாவில் அவர் இதனை தெரிவித்தார்.

சீனாவில் 1921ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சி நிறுவப்பட்டது. இதன் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள் சீனா முழுவதும் களைகட்டியுள்ளன. குறிப்பாக தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள தியானென்மன் சதுக்கத்தில் பிரமாண்ட விழா நடைபெற்றது. சுமார் 70 ஆயிரம் பேர் இந்த விழாவில் பங்கேற்றிருந்தனர். அப்போது மக்களை உற்சாகப்படுத்த இசை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

இதனைத் தொடர்ந்து தங்களின் பெருமையை பறைசாற்ற சீனா மிக பிரமாண்ட ராணுவ அணிவகுப்பை நடத்தியது. பின்னர் தியானென்மன் சதுக்கத்தில் சீன கம்யூனிஸ்ட் கொடி ஏற்றப்பட்டது.

அதிபர் ஷீ ஜின் பிங் இந்நிகழ்ச்சிகளுக்கு தலைமை தாங்கினார். கம்யூனிஸ்ட் கட்சியின் 100ஆவது ஆண்டு விழாவை குறிக்கும் வகையில் விமானப்படை விமானங்கள் வானில் 100 என்ற வடிவத்தை ஏற்படுத்தி பெய்ஜிங் நகர் முழுவதும் பறந்து சென்றது. மக்கள் வியப்புடன் இதனை கண்டு ரசித்தனர்.

பின்னர் இந்நிகழ்ச்சியில் பேசிய அதிபர் ஷீ ஜின் பிங், "யாரும் சீனாவை அடக்க அனுமதிக்க மாட்டோம்" என கூறினார். மறைமுகமாக அமெரிக்காவை எச்சரிக்கும் வகையில் பேசிய அவர், "சீனாவின் திறமையை குறைத்து மதிப்பிடாதீர்கள். சீனாவை ஒடுக்க நினைத்தால் அவர்களின் தலையை சீன இரும்பு பெருஞ்சுவரில் அடித்து நொறுக்குவோம்" என்று எச்சரித்தார். 

சீனா முழுவதுமே கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு கொண்டாட்டங்கள் கோலாகலமாக நடைபெற்று வருகின்றன. தியானென்மென் சதுக்கத்தில் நடைபெற்ற கொண்டாட்டத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் கூடியிருந்தாலும் ஒருவர் கூட முகக்கவசம் அணியவில்லை. கொரோனா இல்லாத கொண்டாட்டமாக சீனர்களுக்கு இது அமைந்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com