போர் தீவிரமடைந்தால் இந்தியாவிலுள்ள சாமானியர்களுக்கும் கடும் பாதிப்பு!

இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போர் தீவிரம் அடைந்துள்ளதால், அது சர்வதேச பிரச்னையாக மாறியுள்ளதோடு, ஒவ்வொரு சாமானியனுக்கும் பொருளாதார சுமையாக மாறும் சூழல் உருவாகியுள்ளது.
பொருளாதார பாதிப்பு
பொருளாதார பாதிப்புமுகநூல்

காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் போர் 3வது வாரத்தை எட்டியிருக்கிறது. வான் வழித்தாக்குதலைத் தொடர்ந்து எந்த நேரத்திலும் தரைவழி தாக்குதலை இஸ்ரேல் தொடங்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹெஸ்புல்லா
ஹெஸ்புல்லாமுகநூல்

லெபனானிலிருந்து ஹெஸ்புல்லா படைகள் தாக்கும் நிலையில் அந்த முனையிலும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரானும் நேரடியாக போரில் குதிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. மறுமுனையில் மத்திய தரைக்கடல் பகுதியில் அமெரிக்க கப்பல்கள் முகாமிட்டுள்ள நிலையில் அங்கு சீன போர் கப்பல்களும் விரைகின்றன. 

இதனால் போர் மேலும் பரவி மாதக்கணக்கில் நீடிக்குமா என்ற அச்சம் எழுந்துள்ளது. இது நடக்கும் பட்சத்தில் பொருளாதார பாதிப்புகளும் கடுமையாக இருக்கும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

பொருளாதார பாதிப்பு
பாரபட்சமின்றி முப்படை தாக்குதல்... சுமார் 2,200 பாலஸ்தீனர்கள் உயிரிழப்பு

”மிக முக்கியமாக கச்சா எண்ணெய் வினியோகம் பாதிக்கப்படுவதுடன் அதன் விலை மேலும் உயர்ந்து  பெட்ரேல், டீசல் விலை உயர்வு, உற்பத்திச்செலவு, போக்குவரத்து செலவு அதிகரிக்க கூடும்." என ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு வங்கியின் பொருளாதார நிபுணர் கனிஷ்கா பரிஷா எச்சரித்துள்ளார்.

இது குறித்து ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கூறுகையில்,” FMCG எனப்படும் தினசரி பயன்படுத்தப்படும் அத்தியாவசிய பொருட்களின் விலையும் கணிசமாக அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. விவசாயத்திற்கு அடிப்படையாக திகழும் உரங்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. நீடிக்கும் போரால் ஏற்படும் பொருளாதார பாதிப்புகளை கருத்தில்கொண்டு ஏற்கெனவே பெரு முதலீட்டாளர்கள் தங்கத்தை நாடத்தொடங்கியுள்ளதால் அதன் விலையும் கடந்த 2 வாரங்களில் வெகுவாக உயர்ந்துள்ளது.

ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு  வங்கி
ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு வங்கிமுகநூல்


போரால் வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வரத்தும் குறையும் என்பதால் அது சார்ந்த தொழில்கள் பாதிக்கப்பட்டு பலரின் வருவாய் ஆதாரமும் பாதிக்கப்படும் நிலை உள்ளது. இஸ்ரேல் போரால் இந்தியாவுக்கும் நிச்சயம் பாதிப்புகள் ஏற்படும் என்றும் எனினும் அவற்றை சமாளிக்கக் கூடிய வகையில் முக்கிய பொருளாதார அம்சங்கள் திருப்திகரமாக இருக்கிறது.” என்று தெரிவித்துள்ளார்.

ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ்
ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் முகநூல்கொரோனா பாதிப்பிலிருந்து உலகம் ஓரளவு மீண்ட நிலையில் தொடங்கிய ரஷ்யா - உக்ரைன் போர் உலக பொருளாதாரத்தை பாதித்து சாமானியர்களுக்கும் சுமையாக
மாறியது. அந்த பிரச்னையே  முழுமையாக நீங்காத நிலையில் இஸ்ரேல் போர் நீடிப்பது உயிர்கள் குறித்த அச்சத்துடன் பிற நாடுகளில் உள்ள சாமானியர்களின் பொருளாதார சுமைகுறித்த அச்சத்தையும் அதிகரித்துள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com